பிரதமரை விமர்சித்ததற்காக ரம்யாவின் பதவியை பறித்த காங்கிரஸ்?
பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ட்விட்டரில் விமர்சித்ததற்காக பிரபல நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து கட்சி தலைமை நீக்கியது என தகவல் கிடைத்துள்ளது. மேலும் அவருக்கு கட்சியில் வேற ஏதாவது பொறுப்பு தரப்படும் என zee news-க்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளராக உள்ள ரம்யா, டுவிட்டரில் ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்துள்ளதுடன், அவரது புகைப்படத்தையும் கேலி செய்யும் வகையில் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை ட்விட்டரில் விமர்சித்ததற்காக பிரபல நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்தியப் பாதுகாப்புத் துறைக்கு 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரபேல் வகைப் போர் விமானங்களை வாங்குவதற்கு உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக - காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் பாஜக கட்சியும் மாறி மாறி சமூக வலைத்தளத்திலும் வெளிப்படையாகவும் விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்ட இதற்க்கு பாஜக கட்சி பதலடி கொடுப்பதையே தற்போது இரண்டு கட்சிகளும் முழுநேர வேலையாக செய்து வருகின்றனர்.