இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமூக ஊடகங்களில் வேடிக்கை பதிவுகளை அவ்வப்போது பதிவிடுவதில் கெட்டிக்காரர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது பதிவுகள் எப்போது சிறியதாக இருந்தாலும், அதன் மூலம் பல ஆழ்ந்த கருத்துகளை உள்ளடக்கி இரப்பார். அந்த வகையில் தற்போது அவர், சீன மொபைல் பயன்பாடுகள் மீதான தடையை மையப்படுத்தி ஒரு வேடிக்கை பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பலிகடாயாய் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் டேவிட் வார்னரையும் இழுத்துள்ளார்.


READ | டிக்டோக் வீடியோவில் பாகுபலியாக மாறிய டேவிட் வார்னர்...வைரல் வீடியோ...


முன்னதாக ஜூன் 29 அன்று, பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக டிக்டோக் உள்ளிட்ட 59 சீன பயன்பாடுகளை இந்தியா தடை செய்தது. இதையடுத்து டிக்டாக் மூலம் பிரபலமானோர் பலரும் தங்கள் திறமைகளை வெளிகாட்ட இனி என்ன செய்வது என திகைத்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆட்டக்காரர் இனி என்ன செய்வார் என கேட்கும் விதமாக ஒரு வேடிக்கை பதிவி அஸ்வின் பதிவிட்டுள்ளார்.



கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து விளையாட்டு போட்டிகளும், தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டது. எனினும் இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் குறித்த திட்டங்கள் தற்போது நடந்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பிரபல நட்சத்திரங்கள் பலரும் வீட்டில் அடைந்தபடி தங்களது நேரத்தை பயனுள்ளதாக செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் டேவிட் வார்னர் கொரோனா முழு அடைப்பு காலத்தின் போது டிக்டோக் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார். பல வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். 


குறிப்பாக தெலுங்கு திரைப்பட வசனங்கள், பாடல்களைக கொண்டு வீடியோக்களை உருவாக்கி இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் இந்தியாவில் தற்போது டிக்டோக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய ரசிகர்களை அவர் இனி டிக்டோக் வழியே மகிழ்விப்பது சிரமமாகியுள்ளது.


இந்த விஷயத்தை வேடிக்கையாக உலகிற்கு சொல்லும் விதமாக “அப்போ அன்வர்?” என பதிவிட்டு இந்த பதிவில் டேவிட் வார்னரையும் இணைந்துள்ளார். இந்த வசனமானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “பாஷா” திரைப்படத்தின் வசனமாகும். படத்தில் தனது நண்பர் பாஷா இனி என்ன செய்வார் என மாணிக்கம் ரஜினி கேட்கும் வசனம் இதுவாகும்.


அஸ்வின் இந்த வசனத்தை தற்போது பயன்படுத்தியதன் மூலம் அவர் கேட்க முயற்சிப்பது “அப்படியானால், டேவிட் வார்னர் இப்போது என்ன செய்யப் போகிறார்?” என்பதே ஆகும். இந்த நீண்டதொரு கேள்வியை இரு வார்த்தைகளில் குறித்து மொழி வித்தகர் ஆகிவிட்டார் நமது அஸ்வின்.


READ | தெலுங்கு வசனத்திற்கு டிக்டாக் செய்த பிரபல கிரிக்கெட் வீரர்; வைரலாகும் Video!...


டிக்டோக் தடை செய்யப்பட்ட செய்தி பிரபலமானதோ இல்லையோ, தற்போது அஸ்வின் ட்வீட் தான் மிகவும் வைரலாகி வருகிறது. அவர் தனது பதிவை வெளியிட்ட இரண்டு மணி நேரத்திற்குள் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளார்.


ட்விட்டர் பயனர்கள் பலரும் அவரது ட்விட்டருக்கு ஆதரவு தெரிவித்து, அவர்கள் பங்கிற்கு டேவிட் வார்னரை மேலும் கலாய்த்துள்ளனர்.