காஞ்சிபுரம் மாவட்டம் எம்.எம்.நகர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு கிளப், சென்னை வடபழனி பைவ் ஸ்டார் கிளப் ஆகியவை, தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் காவல்துறை தலையிடுவதை தடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai high court) வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிளப்களுக்கு வரும் உறுப்பினர்களில் சிலர் தடை செய்யப்பட்ட ரம்மியை விளையாடுவதாகவும், அவர்களை கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதாக கூறி, பெரும்பாலான மற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் காவல்துறையினர் இடையூறு ஏற்படுத்துவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | திமுக எம்.பி மீதான கொலை வழக்கு - சிபிசிஐடி கண்காணிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


இதற்கு காவல்துறை கொடுத்த விளக்கத்தில், தடை செய்யப்பட்ட ரம்மியை விளையாடுவதாக புகார்கள் உள்ள நபர்கள் பொழுதுபோக்கு கிளப்களுக்கு சென்றால், அவர்களை கண்காணிக்க மட்டுமே உள்ளே செல்வதாகவும், அன்றாட நடவடிக்களில் தலையிடும் நோக்கம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், உறுப்பினர்களுக்கு எதிராக புகார்கள் வராத நிலையில் கிளப்களுக்குள் செல்வதில்லை என்றும் காவல்துறை விளக்கமளித்தது. 


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கிளப் நடவடிக்கைகளில் காவல்துறை தலையிடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுவதாக தெரிவித்தார். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையிலும், பொழுதுபோக்கு கிளப்களில் தவறான நடவடிக்கைகள் நடைபெறாமல் கண்காணிக்கும் வகையிலும் கிளப்களில் ரகசிய கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தலாம் என நீதிபதி பரிந்துரை செய்தார். மேலும், கிளப்களில் பொருத்தப்படும் சிசிடிவி-க்கள் உறுப்பினர்களின் தனியுரிமையையும், காவல்துறை விசாரணையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.


ALSO READ | நீதிபதியின் கருத்துகள் புண்படுத்திவிட்டன - நடிகர் விஜய்


இதுதொடர்பாக உரிய ஆலோசனை நடத்தி முடிவெடுக்க தகுந்த நபராக தமிழக டிஜிபி இருப்பதாக தெரிவித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அவரை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் பரிந்துரையை அமல்படுத்த முடியுமா?, அதில் உள்ள சாதக பாதகங்கள் என்ன? என்பது குறித்து விரிவான ஆய்வு செய்து உறுதியான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும், தமிழக டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR