போலி ஆசாமி பெண் பக்தி மற்றும் சமூக ஆர்வாளர் ரெஹானா பாத்திமா பியரிஜான் சுலைமான் கவர்ச்சி புகைப்படங்கள்.....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் மாதாந்திர பூஜைக்காக கடந்த 17 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டபோது, பெண்கள் சிலர் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். இதையடுத்து பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 2 பெண்கள், 300 போலீஸ் பாதுகாப்புடன் நுழைய இருந்தனர். அவர்கள் கோயிலுக்கு மிக அருகில் சென்ற போது, போராட்டக்காரர்கள் பெரும் அளவு கூடி, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரண்டு பெண்களும் சபரிமலையிலிருந்து கீழே இறங்கும் நிலை ஏற்பட்டது. அந்த இருவரில் ஒருவர் பத்திரிக்கையாளர் கவிதா, மற்றொருவர் சமூக ஆர்வாளர் ரெஹானா பாத்திமா. 


இந்நிலையில், கிஸ் ஆஃப் இந்திய அமைப்பைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா பியரிஜான் சுலைமான் (rehana fathima pyarijaan sulaiman) என்கிற கொச்சியைச் சேர்ந்த பெண் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஐயப்பன் கோயிலுக்கு மாலையணிந்து செல்லும் பக்தர்கள் உடுத்தும் கருப்பு வேஷ்டி, கருப்பு சட்டை, ஐயப்ப மாலை, நெற்றியில் பட்டை என ஐயப்ப பக்தரைப்போல காட்சியளிக்கும் ரெஹனா பாத்திமா. தனது வேட்டியை இரு தொடைகளும் தெரியும் வகையில் ஆபாசமாக செல்ஃபி எடுத்து அந்த புகைப்படத்தை அவரது முகநூல் அஞ்சலில் பதிவிட்டுள்ளார். 



இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த புகைப்படத்தில் "கொள்கை" என்று பதிவிட்டுள்ளார். இவர் தனது முகநூலஞ்சலில் கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.