Reptile Facts: பாம்புகள் பற்றிய இந்த அதிசய உண்மைகள் தெரியுமா?
பாம்புகளைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படாத விலங்குகளில் முக்கியமானது பாம்பு.
புதுடெல்லி: பாம்புகளைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அவை பெரும்பாலும் சாதாரணமானவை என்று சொல்லிவிட முடியாது. செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படாத விலங்குகளில் முக்கியமானது பாம்பு.
இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்புகளின் இனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களுக்கு மட்டுமே வீரியமான நச்சு இருக்கிறது. வேறு சில பாம்புகளின் நச்சானது, மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று சொல்லப்படுகிறது.
பாம்புகள் செல்லப் பிராணிகள் அல்ல, மற்ற செல்லப்பிராணிகளைப் போல அழகானவையும் அல்ல. பாம்பு என்றாலே முதலில் வருவது பயம் தான். பாம்பு எப்போது யாரை கடிக்கும் என்று சொல்ல முடியாது என்பதால் அச்சம் அதிகமாகவே இருக்கிறது.
ஆனால் பாம்புகள் மனிதர்களுக்கு அவ்வளவு பெரிய எதிரிகள் அல்ல. பாம்புகளைப் பற்றி நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான உண்மைகள் உள்ளன. தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | கட்டிப்புடி வைத்தியம் செய்யும் காதல் பாம்புகள்: வைரலாகும் பாம்புகளின் ரொமான்ஸ்
பாம்புகள் சூரிய சக்தியால் தங்களைத் தாங்களே சார்ஜ் செய்து கொள்கின்றன
பாம்பு உடல் வெளிப்புற வெப்பத்தை சார்ந்து இருப்பதால் சூரிய சக்தியால் ஆற்றலை பெறுகின்றன. அவற்றின் எக்டோர்மிக் அதாவது அவற்றின் உடல் வெப்பநிலை வெளிப்புற வெப்பநிலையைப் பொறுத்தது. எனவே பாம்புகள் சூரியன் போன்ற வெப்ப மூலங்களின் வெப்பத்தை பயன்படுத்தி தங்களை வெப்பப்படுத்திக் கொள்கின்றன.
பாம்புகள் கண்களைத் திறந்து தூங்கும்
பாம்புகள் இமைக்காது. இதுவே மனிதர்களுக்கு அவை அதிக பயத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணமாகிறது. மேலும், பாம்புகள் கண்களைத் திறந்தே தூங்குகின்றன. பாம்புகளின் கண்களைப் பாதுகாக்கும் பிரில் என்ற மெல்லிய திரை உள்ளதால் அவற்றால் இமைக்க முடியாது.
பாம்புகள் நாக்கினால் மணம் நுகரும்
மனிதர்களைப் போல, பாம்புகள் மூக்கினால் வாசனையை உணர்வதில்லை. அதற்கு பதிலாக நாக்கினால் மணத்தை உணர்கீன்றன. பாம்பின் நாக்கு, பல்வேறு வாசனைகளையும் சமிக்ஞைகளையும் உணரும் பல ஏற்பிகளைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | இது பாம்புகளின் மரம் பிடிக்கும் சண்டை: வைரலாகும் ஆதிக்கப் போர்
சில பாம்புகள் முட்டையிடாது
70% பாம்பு இனங்கள் மட்டுமே முட்டையிடுகின்றன. அதேசமயம் குளிர் பிரதேசங்களில் வாழும் பாம்புகள் முட்டையின்றியே குழந்தைகளை பெற்றெடுக்கின்றன. ஏனென்றால், குளிர்ந்த காலநிலையில் முட்டைகளால் உயிர்வாழ முடியாது.
பாம்புகளின் வகைகளின் எண்ணிக்கை
2020 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, சுமார் 3,789 வகையான பாம்புகள் உள்ளன. ஊர்வன வகுப்பில் அவை 30 வெவ்வேறு குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, அவற்றின் துணைக் குடும்பங்கள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் மட்டும் 140 இனங்கள் உள்ளன. இலங்கையில் 200 பாம்பு இனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சமையல்காரரின் கைவண்ணத்தில் வைரலாகும் பாம்பு வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR