வனப்பகுதியை ஒட்டியிருக்கும் ஊருக்குள், காட்டுக்குள் இருந்து வெளியேறிய காண்டாமிருகம் புகுந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. காண்டாமிருகம் தார் சாலையில் ஓடி வருவதை பார்த்தவுடன் பீதியடைந்த மக்கள், அவசர அவசரமாக வீட்டிற்குள் ஓடி தஞ்சமடைந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போதெல்லாம் வன விலங்கு மற்றும் மக்கள் இடையே ஏற்படும் மோதல் அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் அடிப்படையாக கூறப்படுகிறன்றன. வன பகுதி நிலங்கள் ஆக்கிரமிப்பு, தண்ணீர் வறட்சி உள்ளிட்டவை வன விலங்குகள் வெளியேற்றத்துக்கு பிரதான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. இதனை தடுக்க மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வன விலங்கு மற்றும் மனித மோதலை தடுப்பதாக இல்லை. விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இத்தகைய மோதல்களை குறைந்ததாக தெரியவில்லை.


மேலும் படிக்க | கார்ட்டூனை பார்த்து விளையாடும் பூனைக்குட்டி! இணையத்தை கலக்கும் வீடியோ!



இப்படி இருக்கும் சூழலில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் காண்டாமிருகம் ஊருக்குள் புகுந்து ஓடி வரும் காட்சியை பகிர்ந்துள்ளார். மேலும், கேப்சனில் மனிதர்களின் வாழ்விடம் காண்டாமிருகத்தின் வாழ்விடத்தில் நுழையும்போது நகரத்தில் காண்டாமிருகத்தின் நடமாட்டத்தை தவிர்க்க முடியாதது எனத் தெரிவித்துள்ளார். அதாவது, வனப்பகுதியை ஒட்டிய நிலங்கள் ஆக்கிரமிப்பதன் விளைவை தன்னுடைய கேப்சனில் மறைமுகமாக சாடியுள்ளார். 


ஆனால் இந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை. அதேநேரத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து சகஜமாக ஓடுவதை பார்த்து அச்சம் தெரிவித்துள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவே இத்தகைய பிரச்சனைகளுக்கு காரணம் என்றும் விமர்சித்துள்ளனர். காண்டாமிருகம் ஊருக்குள் புகுந்து ஓடும் வீடியோவை இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 


மேலும் படிக்க | சுறாமீனை வெறும் கைகளால் பிடித்த நபர்! அதிர்ச்சியூட்டும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ