அந்த நட்பு மட்டும் இல்லேன்னா.. பல்லியை பதம் பார்க்க நினைத்த பாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்
நட்பின் மகத்தான உதாரணத்தை முன்வைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு பல்லி, தனது நண்பனை சிக்கலில் இருந்து காப்பாற்ற தனது உயிரைப் பணயம் வைத்து, ஆபத்தான பாம்புடன் சண்டையிடுகிறது.
பாம்பும் பல்லியும் சண்டையிடும் வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
பொதுவாக மகிழ்ச்சியில் மட்டுமின்றி துன்பத்திலும் கவசமாக உங்களுடன் நிற்பவனே உண்மையான நண்பன். ஒரு உண்மையான நண்பர் கடினமான சூழ்நிலைகளிலும் உங்களின் பக்கம் நிற்பார், ஏனென்றால் உண்மையான நண்பர்களாக இருப்பவர்கள் தங்கள் நண்பரை ஒருபோதும் சிக்கலில் விட்டுவிட மாட்டார்கள். நண்பனுக்காக, அந்த நபரும் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சரி ஒன்றாக நின்று அதை சந்திக்க தயாராக இருப்பார். இந்த எபிசோடில், சமூக வலைதளங்களில் நட்பின் மகத்தான உதாரணத்தை வழங்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது, அதில் ஒரு பல்லி தனது நண்பன் சிக்கலில் இருப்பதை பார்த்து, தனது உயிரைப் பணயம் வைத்து, ஆபத்தான பாம்பை எதிர்கொள்கிறது, மற்றும் தனது நண்பனை காப்பாற்ற பாம்பிடம் பயங்கரமாக சண்டையிடத் தொடங்குகிறது.
மேலும் படிக்க | தொழிலாளிக்கு உதவிய குட்டி நாய்: கண் கலங்கிய நெட்டிசன்ஸ்.. வைரல் வீடியோ
இந்த நிலையில் பாம்பு மற்றும் பல்லியின் இந்த கடுமையான சண்டை வீடியோ Instagram இல் @ivan_starykh_ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ கம்போடியாவில் உள்ள அங்கோர் கோவிலில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, அங்கு பச்சை நிறப் பாம்பு மற்றும் பல்லி ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதைக் காண முடிகிறது. இதற்குப் பதிலளித்து, ஒரு பயனர் "ஒரு ஹீரோவைப் போலவே நுழைந்தார்" என்று எழுதியுள்ளார், மற்றொரு பயனர் "இது உண்மையான நட்பு" என்று எழுதியுள்ளார்.
பாம்பிடம் பல்லி சண்டையிடும் வீடியோவை இங்கே காணுங்கள்:
வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு சுவரில் பாம்பு மற்றும் பல்லி ஒன்றாக இருப்பதைக் காணலாம். பாம்பு பல்லியை முழுமையாப் பிடித்து மெதுவாகக் கொல்ல முயல்கிறது, பல்லி அதன் பிடியில் இருந்து வெளியே வர முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையில், மற்றொரு பல்லி தனது நண்பனுக்கு உதவ அங்கு வந்து பாம்பை தாக்குகிறது. அந்த மற்றொரு பல்லி பாம்புடன் கடுமையாகப் போராடுகிறது, இறுதியில் தனது நண்பனை பாம்பின் பிடியிலிருந்து விடுவிப்பதில் வெற்றி பெறுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ