புதுடில்லி: விம்பிள்டன் 2021 இல் நடந்த முதல் சுற்று அட்ரியன் மன்னாரினோவுக்கு எதிராக விளையாடிய ஆட்டத்தில் ரோஜர் பெடரர் பின்தங்கியிருந்ததால் ரசிகர்களின் மனம் வருத்தத்தில் இருந்தது. முதல் மூன்று செட்களில் இரண்டில் முன்னிலை வகித்த போதிலும், ஆட்டத்தின்போது ஏற்பட்ட காயத்தால் மன்னாரினோ ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன்பிறகு ரோஜர் பெடரருக்கு ஏற்பட்டிருந்த அழுத்தம் குறைந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடக்க செட்டை வென்ற பிறகு, ஃபெடரர் பின்தங்கிவிட்டார். மன்னாரினோ அடுத்த இரண்டு செட்களையும் வென்று முன்னிலை பெற்றார்.  


போட்டிக்கு பிறகு பேசிய பெடரர் ஜாலியான மனநிலையில் இருந்தார். இது அனைவராலும் விரும்பப்பட்டது. பெடரர் சிறந்த விளையாட்டு வீரர், மன்னாரினோவுக்கு ஏற்பட்ட காயத்திற்காக வருத்தம் தெரிவித்தார். 


Also Read | Virat Kohli டெஸ்ட் கேப்டனாக நீடிப்பாரா? அல்லது இவர் விராட் இடத்தைப் பெறுவாரா?


“மன்னாரினோவுக்கு ஏற்பட்ட காயம் மோசமானது. ஒரு ஷாட் ஒரு போட்டியின் முடிவை, ஒரு சீசனை, வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதை இது காட்டுகிறது. அவர் விரைவாக குணமடைவார், அவரை மீண்டும் மைதானத்தில் பார்க்க விரும்புகிறேன், அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஃபெடரர் மன்னாரினோ மீது தனது அக்கறையை தெரிவித்தார்.   



அவர் ஆட்டத்தில் இல்லாதிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதா என்று பொருள்படும் ‘Absence makes the heart grow fonder’என்ற புகழ்பெற்ற பழமொழி சொல்வது போன்ற மனநிலை இருக்கிறதா என்று செய்தியாளர் ஒருவர் பெடரரிடம் கேள்வி எழுப்பினார். 


இதற்கு பதிலளித்த 20 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற பெடரர் “மன்னிக்கவும், எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை. என் மனம் வெறுமையாக இருக்கிறது. இது எனக்கு புரியவில்லை. எனக்கு போதுமான ஆங்கில அறிவு இல்லை” என்று இயல்பாக பதிலளித்தார்.


“எனது ஆங்கிலம் சுமாரானது தான். நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ரசிகர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மற்றும் எல்லோரும் உட்பட அனைத்து வீரர்களும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். விம்பிள்டனில் ரசிகர்கள் இல்லாத போட்டியை நடத்துவது வருத்தமானதாக இருந்திருக்கும். இங்கே விளையாடுவது பாக்கியம்” என்று ஃபெடரர் (Roger Federer) முடித்தார்.


சுவிஸ் விளையாட்டு வீரர் ரோஜர் பெடரர்,  இரண்டாவது சுற்றில் ரிச்சர்ட் கேஸ்கெட்டை விளையாடுவார். 


Also Read | T20 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் இருந்து UAEக்கு மாறியது  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR