வைரல் செய்திகள்: சமூக வலைதளங்களில் பல்வேறு வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இவற்றைப் பார்த்து நெட்டிசன்கள் மன அழுத்தத்தை மறந்து சிரித்து வருகின்றனர். அதிலும் தற்போதைய காலக்கட்டத்தில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி இங்கு காதலர்களின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில், காதல் ஜோடிகள் சாலையோரம் நின்றுக் கொண்டு இருப்பதை நாம் இந்த வைரலான வீடியோவில் காணலாம். கொளுத்தும் வெயிலில் அவருடைய ஸ்கூட்டர் மரத்தடியில் நிற்பதைக் காணலாம். அப்போது காதலி தன் காதலனின் நெற்றியில் படர்ந்த வியர்வையைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்படுகிறாள். அந்த பெண் உடனடியாக ஒரு கர்சீஃப் அல்லது கைக்குட்டையை கையில் எடுத்து, தன் காதலியின் நெற்றியில் இருந்து வியர்வையை கவனமாக துடைக்க ஆரம்பிக்கிறாள்.


மேலும் படிக்க | ரோபோவை விட வேகமாக மனப்பாடம் செய்யும் பலே சிறுவன்..! வைரல் வீடியோ