உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததற்கு வீரர்களின் குடும்பத்தை திட்ட வேண்டாம் என சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் கணவருமான சோயிப் மாலிக், முதல் பந்திலேயே "டக் -அவுட்" ஆகி வெளியேறினார். இது பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைய செய்துள்ளது.


போட்டியின் நாள் முன் இரவு பாகிஸ்தான் வீரர்கள் சிலருடன் சானியா மிர்சா லண்டனில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் உணவருந்த சென்றுள்ளனர். இங்கு பாக்கிஸ்தான் அணி வீரர்கள் போதை வஸ்துக்களையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வினை அங்கிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.



இந்நிலையில் இந்தியாவிடன் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில் இந்த வீடியோவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ரசிகர்கள் வீரர்கள் மற்றும் சானிய மர்சாவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.


குறிப்பாக "இந்திய அணியுடனான முக்கியமான போட்டிக்கு முதல் நாள் இரவு  நன்றாக ஓய்வெடுக்காமல் இப்படி விருந்தில் பங்கேற்றால், உடல் அசதி ஏற்பட்டு ஆட்டத்தில் சிறப்பாக விளையாட முடியாது என உங்களுக்கு தெரியாதா? சோகிப் மாலிக்குடன் விருந்தில் பங்கேற்றதன் மூலம், இந்தியாவுடனான ஆட்டத்தில் அவர்  "டக் -அவுட்" ஆனதுக்கு நீங்கள் காரணமாகிவிட்டீர்கள்" என, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், தமது ட்விட்டர்  பக்கத்தில்  குற்றம்சாட்டியுள்ளார்.



இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சோயிப் மாலிக்., "பாகிஸ்தான் ஊடகங்கள் எப்போது தான் நம்பிக்கைகுறிய வகையில் செயல்பட போகிறீர்கள். இணையத்தில் தற்போது வெளியாகும் வீடியோ கடந்த 13-ஆம் தேதி பிடிக்கப்பட்ட வீடியோ., நாங்கள் தோல்வியடைந்தது உண்மை தான். ஆனால் அல்லாவின் கிருபையால் மீண்டும் நாங்கள் வெற்றி பெறுவோம்.


பல ஆண்டுகாலம் நான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளேன். இருந்தபோதிலும் என்னுடைய செயல்பாடுக்கு அவ்வப்போது நான் நான் விளக்கம் அளிக்க வேண்டி இருப்பது வேதனையளிக்கின்றது" என தெரிவித்துள்ளார். மேலும் வீரர்களின் தோல்விக்காக வீரர்களின் குடும்பத்தாரை இழிவுபடுத்துவது நியாயமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.