இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை சாரா டெய்லர் வெளியிட்ட நிர்வாண புகைப்படம் இணையதளத்தில் வைரளாகி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்து பெண் கிரிக்கெட் வீரர் சாரா டெய்லர் தனது வஞ்சக பேட்டிங் மற்றும் அற்புதமான விக்கெட் கீப்பிங் திறமைக்கு பெயர் பெற்றவர். அவர் இப்போது நீண்ட காலமாக தேசிய அணியின் அங்கமாக இருந்தார. ஆனால், சில தனிப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார், இதன் காரணமாக அவர் சமீப காலங்களில் நிறைய கிரிக்கெட் போட்டிகளை தவறவிட்டார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு, இந்திய அணிக்கு எதிரான டT-20 போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். இதுவரை இவர் இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் (300 ரன்கள்), 126 ஒருநாள் (4056 ரன்கள்) 90 டி-20 (2177 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.


இந்நிலையில், இவரின் நிர்வாண போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கான காரணத்தையும் சாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சாரா டெய்லர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ‘என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும், இது எனக்கு கூச்சத்தை ஏற்படுத்தியது என்று. ஆனால் பெண்கள் நலனுக்காக என்னை அழைத்த யூ.கே. பெண்கள் நலப்பிரிவுக்காக இதை பெருமையுடன் ஏற்றுக்கொண்டேன். எல்லா பெண்களும் அழகுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி’ என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 



omen's health என்ற இதழ் பெண்களுக்கான விழிப்புணர்வை நாடு முழுவதும் பரப்பி வருகிறத. மேலும் பெண்கள் எவ்வாறு உடல் அளவிலும் மனதளவிலும் உறுதியுடனும் வலிமையுடனும் இருக்க வேண்டும் எனவும் கவலை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு வெளியேற வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு விழிப்புணர்வுகளை இந்த இதழ் வெளியிட்டு வருகிறது. இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டைலர் பல்வேறு கவலைகளையும், மன அழுத்தங்களையும் சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்தவர். 


இந்நிலையில் மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து எவ்வாறு வெளிவரவேண்டும் என்று விழிப்புணர்வு பரப்பி வரும் omen's health என்று இதழிற்கு இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் சாரா டைலர் நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் செய்வது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மன அழுத்தம் மற்றும் கவலை போன்ற விழிப்புணர்வுகளுக்கு இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் சாரா டெய்லர் வெளியிட்ட நிர்வாண புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.