COVID-19 Vaccine போட்டுக் கொண்டால் Dance ஆடினால் சூப்பராய் இருக்குமா? WATCH VIDEO
குர்தீப் பாந்தர் என்ற வெளிநாடு வாழ் இந்தியரின் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 55 விநாடிகள் கொண்ட வீடியோவை ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். தாளத்துக்கு ஏற்றவாறு மகிழ்ச்சியுடன் நடனமாடும் அவரைப் பார்க்கும் அனைவருக்கும் உற்சாகம் ஏற்படும்.
குர்தீப் பாந்தர் என்ற வெளிநாடு வாழ் இந்தியரின் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 55 விநாடிகள் கொண்ட வீடியோவை ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். தாளத்துக்கு ஏற்றவாறு மகிழ்ச்சியுடன் நடனமாடும் அவரைப் பார்க்கும் அனைவருக்கும் உற்சாகம் ஏற்படும்.
வைரல் வீடியோவை பார்த்தால் உங்களுக்கும் டான்ஸ் ஆடத் தோன்றலாம்!
COVID-19 தடுப்பூசியை போட்டுக் கொண்டதும் அதை கொண்டாடும் வகையில் நடனம் ஆடும் இந்த சீக்கியர் பங்க்ரா நடனக் கலைஞர். கனடாவில் உறைந்த ஏரியில் நடனமாடி அதை கொண்டாடுகிறார். கனடாவில் வாழும் Gurdeep Pandher என்ற சீக்கியர் சில நாட்களுக்கு முன்பு மாடர்னா கோவிட் -19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். அதன் பிறகு பனியால் உறைந்த ஏரிக்குச் சென்று, பங்க்ரா நடனமாடி அந்த வீடியோவைப் பதிவு செய்தார்.
Also Read | Bharat Biotech: கோவாக்சின் 81% மருத்துவ செயல்திறனைக் காட்டுகிறது
55 விநாடிகள் கொண்ட வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் குர்தீப் பாந்தர். அந்த வீடியோவுடன், குர்தீப் மக்களுக்கு ஒரு அழகான மற்றும் எழுச்சியூட்டும் செய்தியையும் எழுதியுள்ளார்: நேற்று மாலை கோவிட் -19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்டேன். மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்கள் மனதில் பொங்கி வழிகிறது. எனவே நடனமாட நான் உறைந்த ஏரிக்குச் சென்றேன். அனைவரும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்”
இந்த வீடியோவை ரசிக்கும் பலரும், பலவிதமான கமெண்டுகளை போட்டு, குர்தீப் பாந்தரை உற்சாகப்படுத்துகின்றனர்.
கனடாவின் யூகோன் நகரத்தில் (Yukon city) குர்தீப் தடுப்பூசி போட்டுக் கொண்டார். 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு COVID-19 தடுப்பூசி கிளினிக்குகளை திறக்கும் முதல் கனடாவின் முதல் நகரம் இதுவே.
கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைத்த பிறகு குர்தீப்பின் மகிழ்ச்சியான நடனம் வைரலாகி, இணையத்தில் வைரலாகிறது. ட்வீட் செய்த வீடியோ கிட்டத்தட்ட இரண்டு நாட்களில் 1,16,000 லைக்குகளை பெற்றுள்ளது. 2.6 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வீடியோவை பார்த்து ரசித்திருக்கின்றனர்.
Also Read | சப்தபதி சடங்குடன் செய்த திருமணம் ‘கலாச்சார அவமதிப்பு?’ குமுறும் நெட்டிசன்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!