Bharat Biotech: கோவாக்சின் 81% மருத்துவ செயல்திறனைக் காட்டுகிறது

இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர் பாரத் பயோடெக்கின் தயாரிப்பான கோவாக்சின் 3 ஆம் கட்ட மருத்துவ முடிவுகளை அறிவித்தது. இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இடைக்கால மருத்துவ செயல்திறன் 81 சதவீதமாக இருப்பதாக பாரத் பயோடெக் கூறுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 3, 2021, 07:56 PM IST
  • கோவாக்சின் 81% மருத்துவ செயல்திறனைக் காட்டுகிறது- பாரத் பயோடெக்
  • 3ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் 25,800 தன்னார்வலர்கள் பங்கேற்பு
  • ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து இந்தியாவில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய பரிசோதனை இது
Bharat Biotech: கோவாக்சின் 81% மருத்துவ செயல்திறனைக் காட்டுகிறது title=

புதுடெல்லி: இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர் பாரத் பயோடெக்கின் தயாரிப்பான கோவாக்சின் 3 ஆம் கட்ட மருத்துவ முடிவுகளை அறிவித்தது. இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இடைக்கால மருத்துவ செயல்திறன் 81 சதவீதமாக இருப்பதாக பாரத் பயோடெக் கூறுகிறது.

கோவாக்சினுக்கான 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் 25,800 தன்னார்வலர்களைக் கொண்டு செய்யப்பட்டதாகவும், இது "இந்தியாவில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய சோதனைகள்" என்றும் உற்பத்தியாளர் பாரத் பயோடெக் (Bharat Biotech) நிறுவனம் கூறியது.

"ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து இந்தியாவில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய பரிசோதனை இது” என்று பாரத் பயோடெக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Also Read | இந்திய துறைமுகங்களை தீவிரமாக குறிவைக்கும் Chinese Hackers! 

தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் (National Institute of Virology) பகுப்பாய்வு மேற்கொண்டதில் கோவேக்சின் தடுப்பூசி ஆன்டிபாடிகளை தூண்டுவதாகவும், இங்கிலாந்தில் காணப்படும் புதிய மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் மற்றும் பிற பரம்பரையை சேர்ந்த வைரஸ்களின் தாக்கத்தை குறைப்பதையும் உறுதி செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் தரவுகளை சேகரிப்பதற்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஏற்படும் நோய் எதிர்ப்புத் தன்மையை மதிப்பிடுவதற்கும் தேவையான பரிசோதனைகள் தொடர்கின்றனஅதோடு, கோவிட் உறுதிப்படுத்தப்பட்ட 130 பேரின் இறுதி பகுப்பாய்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்வதாக பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

Also Read | Corona Test பரிசோதனை 3 நாட்களில் 3 முடிவை காட்டுமா? மாநில அமைச்சர் அதிர்ச்சி!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News