`சர்கார்` படத்தின் காட்சிகளை நீக்கியது ஏன்? சன் பிக்சர்ஸ் விளக்கம்
`சர்கார்` படக் காட்சிகளை நீக்கியது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
'சர்கார்' படக் காட்சிகளை நீக்கியது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது எனவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி அ.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திரையரங்குகளில் வைக்கப்பட்டு இருந்த நடிகர் பேனர்களை கிழித்தனர். இதனால் சில இடங்களில் கட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என அதிமுக தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு புதிய தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது.
இந்நிலையில் “சர்கார் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்காக ஆளுங்கட்சியினர் பல திரையரங்குகள் முன் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடமைகளுக்கு சேதம் விளைவித்தனர். திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கோரிக்கையை ஏற்று படத்தை காண வரும் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன” என்று படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.