Viral Video: பாம்பென்றால் படையும் நடுங்கும் என கூறுவார்கள். அது முற்றிலும் உண்மைதான். எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாகும், பாம்பை பார்த்தால் கை, கால்கள் எல்லாம் நடுங்கத்தொடங்கும். அப்படி இருக்க, பாம்பு உங்கள் வீட்டிலேயே வந்து உங்களுக்கு ‘ஹெலோ’ சொன்னால் எப்படி இருக்கும்? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் இப்படி ஒரு அனுபவம்தான் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. வீட்டிற்குள் வந்த பாம்பு ஜோராக படம் எடுத்து ‘உஸ்’ ‘உஸ்’ என்று சத்தம் செய்தபடி எதிரில் உள்ளவர்களை தாக்க வருகின்றது. இது காண்பவர்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.


மழைக்காலங்களில், சில நேரங்களில் பல்வெறு பூச்சிகள், ஊர்வன ஆகியவையும், நீரில் வாழும் விலங்குகளும் மழைத்தண்ணீரோடு வீட்டிற்குள் வந்துவிடுகின்றன. அப்படி ஒருவரது வீட்டிற்கு அழையா விருந்தாளியாக நுழையும் பாம்பின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மொபைலில் எடுக்கப்பட்டுள்ளது.


வீட்டுக்கு வந்து பீதி கிளப்பிய பாம்பின் வீடியோவை இங்கே காணலாம்:



மேலும் படிக்க | வேறு பெண்ணுடன் ஊர் சுற்றிய கணவன்! வசமாக பிடித்த மனைவி! வைரல் வீடியோ!


பெரிய நாகப்பாம்பு ஒன்று வீட்டின் கதவுக்கு அருகில் ஒய்யாரமாய் படம் எடுத்து நிற்பதை வீடியோவில் காண முடிகின்றது. வீடியோவை பார்க்கும் போது அது படம் எடுத்து நிற்பதை யாரோ ஒருவர் மொபைல் போனில் பதிவு செய்வதையும் அதை பார்த்து அந்த பாம்பு கோவம் கொண்டு அந்த நபரை தாக்க வருவதையும் காண முடிகின்றது. வீடியோவில் பாம்பின் சீறும் சத்தம் தெளிவாகக் கேட்கிறது. இந்தக் காட்சி காண்பதற்கு, பீதியை கிளப்புகிறது. 


இந்த வீடியோ சமூக ஊடக தளமான vilasnake என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. 8 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


‘வீட்டுக்கே வந்து பயன் காட்டுதே... சூப்பர்’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘இது ஆண் நாகம் அல்ல, பெண் நாகம்’ என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். ‘இந்த பாம்பை பார்க்கவே பயமாக இருக்கிறது’ என ஒருவர் தன் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.


இப்படிப்பட்ட பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் காண்கிறோம். இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். அப்படிப்பட்ட ஒரு வீடியோவைதான் இந்த பதிவில் நாம் பார்த்தோம்.


மேலும் படிக்க | விநாயகர் சிலையை கரைக்க நவீன மிஷின்!! வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ