வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தால் திகைத்துப் போகாதவர்கள் இருக்க மாட்டார்கள். 


ரயில்வே ஊழியர் ஓடி வந்து தண்டவாளத்தில் விழுந்த ஒருவரை மீட்டு, ரயில் வருவதற்குள் அவரை வெளியே இழுத்து காப்பாற்றிய சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. ரயில்வே ஊழியர் அந்த நபரை மீட்ட சில நொடிகளில், அந்த பாதையில் அதிவேகமாக ஒரு ரயில் செல்கிறது. அதிர்ச்சியளிக்கும் இந்த சம்பவத்தின் வீடியோவை ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | 'எவ்வளவு நக்கினாலும் சுவையே தெரியலையே’: இதயம் கவர்ந்த நாயின் வைரல் வீடியோ 


ரயில்வே அமைச்சகம் ட்வீட் செய்த அதிர்ச்சி வீடியோ


ரயில் நிலையத்தில் இருந்து பதிவாகியுள்ள 24 வினாடி கொண்ட சிசிடிவி காட்சிகளில், ரயில்வே ஊழியர் ஹெச் சதீஷ்குமார், சரக்கு ரயில் ஒன்றுக்காக பச்சைக் கொடியை அசைக்க நடைமேடையை நோக்கி நடந்து செல்வதைக் காண முடிகிறது. திடீரென்று அவர் திரும்பிப் பார்க்கையில், தண்டவாளத்தில் யாரோ விழுந்திருப்பதை உணர்ந்தார். 


தாமதிக்காமல் உடனே பிளாட்பாரத்தை நோக்கி ஓடிப் பாதையில் குதிக்கிறார். ரயில் வருவதற்கு முன், சதீஷ் கீழே விழுந்த நபரை தண்டவாளத்தில் இருந்து வெளியே இழுத்துச் சென்றார். சில நொடிகளில் ரயில் அந்த வழியாக செல்கிறது. சரியான நேரத்தில் சதீஷ் காப்பாற்றாமல் இருந்திருந்தால் அந்த நபர் உயிரை இழந்திருக்கலாம் என்று சொன்னால் அது மிகையாகாது. 


திகைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் இதோ: 



சதீஷ்குமார் சில நொடிகள் தாமதித்திருந்தாலும் கூட, அவரும் அவர் காப்பாற்றிய நபரும் ரயிலில் அடிபட்டிருப்பார்கள். அந்த நபர் தற்செயலாக விழுந்தாரா அல்லது வேண்டுமென்றே ரயில் பாதையில் குதித்தாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


இந்த வீடியோவை தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ள ரயில்வே அமைச்சகம், 'சேவை, பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு. ஒருவர் கடுமையாக காயமடையாமல் காப்பாற்ற பணியில் இருந்த ஊழியர் செய்த துணிச்சலான உதவியால் விலைமதிப்பற்ற உயிர் காப்பாற்றப்பட்டது. இந்திய ரயில்வே எச் சதீஷ் குமார் போன்ற துணிச்சலான மற்றும் கடின உழைப்பாளி ஊழியர்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறது. அவர்களின் துணிச்சலைப் பாராட்டுகிறது. இந்த வீடியோ அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களிடம் இருந்து கமெண்டுகளையும் பெற்றுள்ளது.’ என்று ட்வீட் செய்துள்ளது.


மேலும் படிக்க | Leopard Attack: என்னை பிடிக்கறது ஈஸி இல்ல தம்பி: போக்கு காட்டி தாக்கும் சிறுத்தை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR