நான் பார்த்த முதல் முகம் நீ..! அம்மாவை பார்த்து குட்டி பூனையின் க்யூட்டான செயல்!

பூனைக்குட்டி ஒன்று அதன் தாய் செய்வதை பார்த்து அப்படியே செய்யும் குறும்புத்தனமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jun 24, 2022, 01:35 PM IST
  • அம்மாவை போல கியூட் ஆகா செய்யும் குட்டி பூனை.
  • தாய் பூனையை ஒத்த சாயலில் குட்டி பூனையும் நின்றுகொண்டு இருக்கிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
நான் பார்த்த முதல் முகம் நீ..! அம்மாவை பார்த்து குட்டி பூனையின் க்யூட்டான செயல்!  title=

பொதுவாக குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் அதன் தாய், தந்தை தான் ரோல் மாடலாக இருப்பார்கள், அவை வளர்ந்த பின் யாரை வேண்டுமானாலும் பினபற்றலாம்.  ஆனால் சிறுவயதில் தாய், தந்தை செய்யும் செயலை கவனித்து அதன்படி தான் குழந்தைகளும் பின்பற்றுவார்கள்.  இவ்வாறு மனிதர்கள் மட்டும் தான் செய்வார்களா என்றால் இல்லை, விலங்குகளும் அப்படி தான் நடந்து கொள்கிறது.  இதுபோன்ற ஒரு விலங்கினத்தின் காட்சி தான் இணையத்தில் வைரலாகியுள்ளது, பூனைக்குட்டி ஒன்று அதன் தாய் செய்வதை அப்படியே பின்பற்றி தானும் செய்கிறது, இந்த காட்சியை பலரும் ரசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் பக்கத்தில், யோக் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த அழகிய வீடியோ பலரது பார்வைக்காக பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வைரலாக வீடியோவில், ஒரு மேஜையின் மீது வெண்மை மற்றும் செம்பழுப்பு நிறம் கலந்த தாய் பூனை நிற்கின்றது, அதன் அருகில் தாய் பூனையை ஒத்த சாயலில் குட்டி பூனையும் நின்றுகொண்டு இருக்கிறது.  அந்த தாய் பூனை தனது முன்னங்கால்களில் ஒரு காலை எடுத்து உயர்த்தி வைத்து அதனை தனக்கு நாக்கால் சுத்தம் செய்கிறது, அதனை பார்த்த குட்டி பூனையும் உடனே தனது காலை எடுத்து வைத்து பெரிய பூனை செய்வதை போலயே நாக்கால் காலை சுத்தம் செய்கிறது.  பின்னர் தன்னை பின்பற்றி தனது குழந்தை செய்வதை கண்ட தாய் பூனை அதன் குட்டியை கொஞ்சுகிறது.

 

தாய்க்கும், அதன் குழந்தைக்கும் இருக்கும் ஒரு பாசப்பிணைப்பை இந்த வீடியோ காட்டுகிறது.  இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு நூற்றுக்கணக்கான லைக்குகளும், பல கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | மணிக்கணக்கில் ஓடிவந்த சிறுத்தைக்கு காத்திருந்து அல்வா கொடுத்த மான் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News