Viral Video: பாம்பென்றால் படையும் நடுங்கும் என கூறுவார்கள். அது முற்றிலும் உண்மை. பாம்பை விட பயங்கரமான விலங்குகள் பல இருந்தாலும், பாம்பு என்ற பெயரை கேட்டாலே அச்சம் நம்மை தொற்றிக்கொள்கிறது. இவ்வளவு இருந்தும், சிலர் பாம்பை சீண்டி வம்பை விலைக்கு வாங்குவதும் உண்டு. நம்மை நோக்கி  வேகமாக பாம்பு தரையில் ஊர்ந்து வந்தாலே தலை சுற்றும். பாம்பு பறந்து வந்தால்?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பு பறந்து வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்த பாம்பு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்து பலர் அச்சத்தின் உச்சிக்கே சென்று விட்டனர். 


பாம்புகள் சில சமயங்களில் வீட்டில் மறைந்திருப்பதையும், சில சமயங்களில் சில பொருட்களில் மறைந்திருப்பதையும் நாம் அவ்வப்போது நிஜத்திலும், வீடியோக்களிலும் பார்த்துள்ளோம். இதுமட்டுமின்றி, பல சமயங்களில் அவை ஷூக்கள் அல்லது ஸ்கூட்டர்களிலும் காணப்படுகின்றன. ஆனால் தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோவில் பாம்பு ஒன்று மின்சார டிரான்ஸ்பார்மரில் மறைந்திருப்பதை காண முடிகின்றது. அங்கிருந்தவர்களுக்கு இது தெரிந்தவுடம் அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.


டிரான்ஸ்பார்மரில் மறைந்திருந்த பாம்பு


பாம்பு எப்படியோ மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி அதில் மறைந்துகொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் பீதியடைகிறார்கள். பாம்பு பிடிப்பவர் அழைக்கப்படுகிறர். அவர் வந்து ஒரு நீண்ட கோல் போன்ற கருவி மூலம் டிரான்ஸ்ஃபார்மரில் தோண்டத் தொடங்குகிறார். இதனால் கோபமடைந்த பாம்பு யாரும் எதிர்பாராத வண்ணம் டிரான்ஸ்ஃபார்மரிலிருந்து பறந்து வந்து அந்த நபரை தாக்க முயல்கிறது.


ஆனால், அவர் பாம்பு பிடிக்கும் நபர் என்பதால் இதற்கும் அவர் தயாரகாவே இருக்கிறார். துரிதமாக செயல்பட்டு அவர் பாம்பின் கழுத்தை பிடித்து அதை அங்கிருந்து எடுத்துச் செல்கிறார். 


மேலும் படிக்க | பூனையின் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் காபி! விலையை கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்!


பதற வைக்கும் பாம்பின் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ சமூக ஊடக தளமான surendra_singh_bar என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


‘பாம்பு பிடிக்க வந்த நபர் பறந்து வந்த பாம்பை பிடித்த வண்ணம் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.’ என ஒரு நபர் அவரை வியந்து பாராட்டியுள்ளார். ‘அந்த பாம்பு பறந்து வருவதை பார்த்தால் மிகவும் பயங்கரமாக உள்ளது’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 


(பொறுப்பு துறப்பு: சமூக ஊடகங்களில் வந்த இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கில் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இதைப் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.)


மேலும் படிக்க | 2 பாம்புகளை வாயில் கவ்விய ராஜ நாகம்... பார்த்தாலே பதறவைக்கும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ