உணவளிக்க வந்த நபரை தாக்கிய முதலை: திகிலூட்டும் வைரல் வீடியோ
Viral Video: உணவளிக்க சென்ற நபரை, அவர் எதிர்பாராத வண்ணம் முதலை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
முதலைகள் மிகவும் ஆபத்தான உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. இவை நீரிலும் நிலத்திலும் வேட்டையாடக்கூடியவை. இரையைப் பார்த்ததும், முதலை உடனடியாக தாக்கத் துவங்கும். இதன் முன்னால் யாராலும் தாக்குப்பிடிக்க முடியாது. இதன் கூர்மையான பற்கள் இரையை பதம் பார்க்காமல் விடாது.
முதலைகள் கடல்வாழ் உயிரினங்கள் உட்பட பல விலங்குகளை தங்களுக்கு உணவாக்குகின்றன. தற்போது முதலை தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி இணையத்தை பீதியில் ஆழ்த்தியுள்ளது. முதலைக்கு உணவு கொடுக்க வரும் நபர் மீது முதலை நடத்தும் திகிலான தாக்குதலை இந்த பதிவில் காண முடிகின்றது.
பராமரிப்பாளர் மீது பாய்ந்த முதலை
இந்த வீடியோவில் ஒருவர் முதலைக்கு உணவளிக்க வருவதை காண முடிகின்றது. ஆனால் அந்த நபர் உணவு கொடுக்கச் சென்றபோது, முதலை அவர் கையைப் பற்றிக் கொள்கிறது. முதலையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர் பல விதங்களில் முயற்சிக்கிறார்.
மெல்ல மெல்ல முதலை அவரையும் நீரில் இழுத்து விடுகிறது. அந்த நபர் முதலையிடம் சிக்கியுள்ளதைப் பார்த்து, அவரது நண்பர் அங்கு ஓடி வருகிறார். பின்னர் இருவரும் சேர்ந்து முதலையை கட்டுப்படுத்துகின்றனர். இந்த வீடியோவைப் பார்க்கும் இணையவாசிகளுக்கும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது.
மேலும் படிக்க | Viral Video: கழுகு குஞ்சு பொரிக்கும் அற்புத காட்சி; படம் பிடித்த ரகசிய கேமரா
ஒரு வழியாக அந்த நபர் தன்னை காப்பாற்றிக்கொள்வதில் வெற்றி பெறுகிறார். உணவளிக்க வந்த நபரை முதலை தாக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
முதலை தாக்கும் அந்த திக் திக் வீடியோவை இங்கே காணலாம்:
இப்படிப்பட்ட ஒரு காட்சியை காண முடியாது
ஆபத்தாக தென்படும் இந்த வீடியோ @Naturelsmetall என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ 1400க்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த திகிலூட்டும் வீடியோவுக்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை லைக்குகள் கிடைத்துள்ளன. உணவளிக்கும் நபரை முதலை தாக்கும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | முடிஞ்சா எங்களை தாண்டி போயி பாரு..வாகன ஓட்டிகளை நடுங்க வைத்த நாய்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR