முடிஞ்சா எங்களை தாண்டி போயி பாரு..வாகன ஓட்டிகளை நடுங்க வைத்த நாய்கள்!

இரண்டு நாய்கள் சாலையில் நின்றுகொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பயமுறுத்தி தலைதெறிக்க ஓடவைத்த சம்பவம் இணையத்தில் பயங்கர சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 11, 2022, 06:23 PM IST
  • வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் நாய்கள்.
  • வண்டியை ஆன் செய்தால் கடிக்க வந்து பயமுறுத்தல்.
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ.
முடிஞ்சா எங்களை தாண்டி போயி பாரு..வாகன ஓட்டிகளை நடுங்க வைத்த நாய்கள்! title=

நாய்கள் பலருக்கு பிடித்தமானவையாக இருந்தாலும் சிலருக்கு பயவுணர்வை ஏற்படுத்துவதாக அமைகிறது.  சில தெரு நாய்கள் வீதிகளில் அலைந்துகொண்டு பலரையும் துரத்தி பயத்தை ஏற்படுத்துகின்றன.  இங்கு வைரலாகியுள்ள வீடியோவில் நாய் ஒன்று பைக்கில் வந்த இருவரை சாலையை கடக்கவிடாமல் செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.  நாய்களின் செயல் அந்த நபர்களுக்கு பயத்தை கொடுத்தாலும், அந்த காட்சியை பார்ப்பவர்கள் அனைவருக்கும் அது நகைச்சுவையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.  

மேலும் படிக்க | Cobra Video: பின்னி பிணையும் நாக பாம்புகள்; இது காதலா இல்லை ஊடலா

இந்த நகைச்சுவையான வீடியோவானது சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.  ரேண்டம் ஃபேக்ட்ஸ் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், சாலையில் இரண்டு நாய்களும் அதற்கு எதிரே இரண்டு நபர்கள் பைக்கிலும் நின்றுகொண்டு இருக்கின்றனர்.  பைக்கை ஓட்டவிடாமல் அந்த நாய் அவர்களை தடுத்து நிறுத்துகிறது, பைக்கை ஸ்டார்ட் செய்தால் அவர்களை நோக்கி அந்த இரண்டு நாய்கள் குறைக்கிறது.  பின்னர் அந்த இருவரும் பைக்கிலிருந்து கீழே இறங்கிவிட்டு வண்டியை தள்ளிக்கொண்டே நாய் நிற்கும் இடத்தை கடக்கின்றனர்.  சிறிது தூரம் சென்றதும் பைக்கை ஸ்டார்ட் செய்கிறார்கள், அவர்கள் வண்டியை தள்ளிக்கொண்டு கடக்கும் வரை அமைதியாக இருந்த நாய்கள் பைக்கை ஸ்டார்ட் செய்ததும் வேகமாக குறைத்தபடி அவர்களை நோக்கி விரட்டிக்கொண்டு ஓடுகிறது.

 

இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த நபர்களிடமும், இணையத்தில் பார்த்த நபர்களிடமும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ இதுவரை ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட பார்வைகளையும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவை பார்த்த அனைவரும் சிரிப்பு எமோஜிகளை பதிவிட்டு கமெண்ட் செக்ஷனை நிரப்பியுள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News