மாணவிகளின் தாறு மாறு சண்டை வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், மாணவிகளின் வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் மாணவ -  மாணவிகளின் வீடியோக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர்களின் வீடியோக்களை இணையவாசிகள் அதிகம் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி மாணவர்களின் தொடர்புடையதாகத் தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். இந்த வீடியோவில், பள்ளி மாணவிகள் ஒருவரையொருவர் உதை, குத்து மற்றும் தடியடியால் அடித்துக் கொள்கிறார்கள். இந்த சம்பவம் எப்போது நடந்தது மற்றும் அதற்கான காரணம் என்ன என்பது இதுவரை வெளியிடப்படவில்லை. சமூக ஊடகங்களில் உள்ளவர்கள் இரண்டு பள்ளிகளுக்கு இடையே சண்டை என்று கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ


வைரலாகி வரும் வீடியோவில், பள்ளி மாணவிகள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்கின்றனர். இதில் ஒரு மாணவி தனது கைகளில் ஒரு குச்சியைப் பயன்படுத்துகிறார். இந்த சண்டை போட்டுக்கொள்ளும் மாணவிகள் சிலர் பெங்களூரில் உள்ள பிரபல பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்று பயனர்கள் கூறுகின்றனர். இந்த வைரலான வீடியோவில் பல மாணவிகள் காயம் அடைந்தது தெளிவாக தெரிகிறது. 



இந்தப் போராட்டத்தில் பள்ளி நிர்வாகத்தினர் தலையிடவோ, இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவோ இல்லை. இருப்பினும், ட்விட்டரில் இதுபோன்ற பல கணக்குகள் உள்ளன, அவர்கள் சம்பவத்தின் போது அங்கு இருந்ததாகக் கூறுகிறார்கள்.


மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ