நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூரரைப் போற்று’ திரப்படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2D எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காப்பான் திரைப்படத்திற்குப் பிறகு, சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் சூரரைப் போற்று. 


இந்தப் படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபரணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் மோகன்பாபு, ஜாக்கி ஷெராப் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.



சூரரைப் போற்று படத்தின் கதை ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சில சுவராசியமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூரரைப் போற்று படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் தற்போது நடைபெற்றுவருகிறது.


சூரரைப் போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.


போஸ்டரில் குறிப்பிட்டுள்ளதன் படி எதிர்வரும் ஜனவரி 7-ஆம் தேதி இத்திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்படும் என தெரிகிறது.