சண்டகோழி-2 திரைப்படத்தின் சென்ங்காரட்ட பாறையிலே பாடல்!
![சண்டகோழி-2 திரைப்படத்தின் சென்ங்காரட்ட பாறையிலே பாடல்! சண்டகோழி-2 திரைப்படத்தின் சென்ங்காரட்ட பாறையிலே பாடல்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/08/20/134470-sandakozhi231.jpg?itok=QGyWh5-_)
சண்டகோழி-2 படத்தில் இடம்பெற்றுள்ள ’சென்ங்காரட்ட பாறையிலே’ பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
சண்டகோழி-2 படத்தில் இடம்பெற்றுள்ள ’சென்ங்காரட்ட பாறையிலே’ பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் சண்டக்கோழி.
முதல் பாகத்தின் வெற்றிக்கு பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை படக்குழுவினர் தயாரித்து வருகின்றனர். விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி மீண்டும் கைகோர்த்துள்ள இந்த இரண்டாம் பாகத்திலும் ராஜ்கிரண் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இது விஷாலின் 25-வது படமாகும். இவர்களுடன் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதனை ‘பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படபிடிப்பு காட்சிகள் நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’சென்ங்காரட்ட பாறையிலே’ பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!