வாழைப்பழம் திருடி சாப்பிட்ட மாணவருக்கு வந்த சோதனை...! ரூ.1 கோடி முடிஞ்சு
விலை உயர்ந்த கலைப் படைப்பில் வைக்கப்பட்ட வாழைப்பழத்தை திருடி சாப்பிட்ட மாணவர் தேவையில்லாத சிக்கலில் சிக்கினார். விசாரணையில் அந்த கலைப்படைப்பின் மதிப்பு ரூ.1 கோடி.
பசி மட்டும் வந்துவிட்டால் போதும், கண்ணில் கிடைக்கும் எந்த உணவாக இருந்தாலும் கிடைக்கும் கேப்பில் சாப்பிட்டுவிடுவோம். அந்த நேரத்தில் ருசியான உணவு மட்டும் கிடைத்துவிட்டால், கடவுள் நமக்காக அனுப்பி வைத்திருக்கும் பிரசாதம் என்றெல்லாம் தலைக்கு மேல கையை உயர்த்தி மிகப்பெரிய கும்பிடும் போட்டுவிடுவோம். சிலர் பிடித்த உணவை பார்த்தால் திருடக்கூட செய்து விடுவார்கள். அதற்காக கொஞ்சமும் கூச்சப்பட மாட்டர்கள். பிடிபட்டால் வரும் பிரச்சனையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என முன்கூட்டியே திட்டம்கூட போட்டு வைத்துவிடுவார்கள். அப்படியான சம்பவம் தான் சியோலில் நடைபெற்றிருக்கிறது. ஆனால் அவருக்கு அவசரமான பசியெல்லாம் ஏற்படவில்லை.
மேலும் படிக்க | ’கடவுளே என்ன காப்பாத்திரு’ குழந்தையிடம் தப்பிக்க அப்பா போட்ட பிளான்: வைரல் வீடியோ
கலைபடைப்புகளை பார்வையிட சென்றவர் அங்கிருந்த படைப்பில் இருந்த வாழைப்பழத்தை திருடி சாப்பிட்டுள்ளார். காலையில் சாப்பிடாமல் இருந்ததால், அதனை போக்கிக் கொள்ள கலைப்படைப்பில் இருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டிருக்கிறார். அது கேட்பதற்கு வாழைப்பழம் தானே என நீங்கள் நினைப்பீர்கள். வாழைப்பழம் இருந்த கலைப்படைப்பின் மதிப்பு சுமார் ஒரு கோடி. அதுவும் அந்த கலைப்படைப்பின் முக்கிய அங்கமே அந்த வாழைப்ப பழம் தான். அப்படியான படைப்பில் இருந்த வாழைப்பழத்தை தான் அந்த மாணவர் திருடி சாப்பிட்டிருக்கிறார்.
அதற்காக அவர் மாட்டிக் கொள்ளவும் செய்தார். அந்த மாணவரிடம் இது குறித்து விசாரித்தபோது, காலையில் சாப்பிடாமல் வந்துவிட்டதாகவும், பசியை அடக்க முடியவில்லை என்பதால் கலைப்படைப்பில் இருந்த வாழைப் பழத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு அந்த தோலை பழம் இருந்த இடத்தில் அப்படியே மாட்டி வைத்துள்ளார். இது அங்கிருப்பவர்களுக்கு நகைப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை முழுமையாக அந்த மாணவரின் நண்பரே வீடியோவாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கலைப்படைப்பை மாற்றி அமைப்பது கூட ஒரு விதமான கலை தான் என தெரிவித்திருக்கிறார்.
மேலும், மாணவர் தனது கலைப்பொருளை சாப்பிட்டது குறித்து ஓவியர் எந்த ஒரு வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மியூசியத்தில் வாழைப்பழம் மாற்றப்படும் என்பதால் இது குறித்து கவலைப்பட ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | பயத்தில் நடுங்கிய நாய்..பாச மழை பொழிந்த டாக்டர்: ஆனந்த கண்ணீரில் நெட்டிசன்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ