மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மேலாடை இன்றி பாடல் பாடியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் (BCAM) அல்லது அமெரிக்காவின் தேசிய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக (NBCAM) குறிப்பிடப்படுவது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரதான தொண்டு நிருவனங்களால் ஒரு மாத கால சர்வதேச சுகாதார பிரச்சாரம் ஆகும். நோய் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கவும், அதன் காரணம், தடுப்பு, நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் சிகிச்சை, மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் மற்றும் ஆதரவு வழங்குதல் போன்றவை இப்பிரச்சாரத்தின் பகுதிகளாகும்.



மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமானது ஆரம்பத் திரையிடல், சோதனை மற்றும் பலவற்றின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு அறிவுரை வழங்கும் ஒரு வருடாந்திர பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 31-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.


இந்நிலையில் தற்போது பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேலாடை இன்றி Divinyls-ன் “I Touch Myself” என்னும் பாடலை பாடியுள்ளார். இப்பாடலின் பொருள் என்னை நான் உணர்கிறேன் என்பது தான்.... "அதன்படி ஒவ்வொரு பெண்ணும் தங்கள் உடல் மீது அக்கரை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்... வரும் முன் காப்பதே சிறந்தது என்பார்கள், இந்த செயல்முறை பல உயிர்களை காப்பாற்றும் என நம்புகின்றேன்" என செரினா குறிப்பிட்டுள்ளார்!