டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி".


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு `வர்மா' என தலைப்பு வைத்துள்ளனர்.


பாலா இயக்கி வரும் இந்த படத்தின் வசனங்களை பிரபல எழுத்தாளும், சினிமா இயக்குநருமான ராஜூ முருகன் எழுதியிருக்கிறார். இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரித்து இருக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இந்நிலையில் ஹிந்தியில் 'கபிர் சிங்' என பெயரிடப்பட்டுள்ள ஷாஹித் கபூர் நாயகனாக நடிக்க, எம்.எஸ் தோணி படத்தின் நாயகி கைரா அத்வானி கதாநாயகியாக நடிக்க உள்ளார். 


அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வங்கா இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முசூரி, டெல்லி, மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கின்றன. மேலும் படம் வரும் 21 ஜூன் 2019 ஆம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.