இணையத்தை கலக்கும் புலி நடனம் ஆடும் இளம்பெண்ணின் வீடியோ!
திருவோண பண்டிகையின் போது வீதியில் புலி வேடமிட்டு நடனமாடிய இளம் பெண்!!
திருவோண பண்டிகையின் போது வீதியில் புலி வேடமிட்டு நடனமாடிய இளம் பெண்!!
தமிழர்களின் மனம் கவர்ந்த பண்டிகையான பொங்கலை போல் கேரளாவில் அனைவரும் இணைந்து கொண்டாடும் விழா திருவோண பண்டிகையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த விழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு 11.9.2019 அன்று கொண்டாடப்படது. திருவோண திருநாளில் எல்லா கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்று மாலை கேரளாவில் ‘செண்டை’ என்று அழைக்கப்படும் கேரள பாரம்பரிய மேள தாளத்துடன் புலி ஆட்டம், சிங்காரி மேளம், கதகளி நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பாம்பு போன்ற நீண்ட படகுப்போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெறும்.
இந்நிலையில், கேரளத்தின் பிரபலமான நாட்டுப்புற நடனக்கலையில் ஒன்றான புலி நடனத்தை (புலி களி) ஒரு இளம்பெண் ஆடும் காட்சி இணையத்தில் வைரளாகி வருகிறது. இந்த நடனத்தை பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே பழங்காலமாக ஆடி வருகின்றனர். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த நடனத்தை தைரியமாக ஒரு அழகான இளம்பெண் ஆடும் வீடியோ இணையத்தில் வைரளாகி வருகிறது.
இந்த வீடியோவை, கேரள எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சஷி தரூர், அந்த ஒஎன்னை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பெண் கலைஞர் கேரள வீதிகளில் புலி காளி செய்வதைக் காணலாம். அண்மையில் மாநிலத்தில் முடிவடைந்த ஓணம் கொண்டாட்டத்தின் போது இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது. அந்த ட்விட்டர் பதிவில்; "கேரளாவில் வைரலாகப் போகிறது - ஓணம் கொண்டாட்டங்களில் ஒரு பெண் புலி காளியை நடனமாடுகிறார் (பொதுவாக ஆரம்பத்தில் நீங்கள் பார்ப்பது போல் ஒரு ஆண் பாதுகாத்தல்) இது பல மலையாளிகளின் இதயங்களை ஈர்த்துள்ளது!" என குறிப்பிட்டுள்ளார்.
திருஓண நாளன்று ஓணசத்யா என்ற 64 வகையான உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், பருப்பு பாயசம், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும்.