மூன்று அவித்த முட்டைகளுக்கு ரூ.1600 கட்டணம் வசூலித்ததாக ரசீதுடன் இசை அமைப்பாளர் சேகர் ராவிஜயானி புகார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்று அவித்த முட்டைகளுக்கு நட்சத்திர ஓட்டலில் தன்னிடம் இருந்து சுமார் 1600 ரூபாய் கட்டணம் வசூலித்ததாக ரசீதுடன் இசை அமைப்பாளர் சேகர் ராவிஜயானி புகார் தெரிவித்துள்ளார். 


சமீபத்தில் சண்டிகரில் ஓட்டல் ஒன்றில் 2 வாழைப்பழங்களுக்கு ரூ.442.50 ரசீது கொடுக்கப்பட்டதாக நடிகர் ராகுல் போஸ் டுவீட்டரில் பதிவிட்ட வீடியோ வைரலானது. அதை தொடர்ந்து, கார்த்தி தார் என்பவர் மும்பையில் உள்ள Four Seasons என்ற ஹோட்டலில் இரண்டு அவித்த முட்டைகளுக்கு ரூ.1700 கட்டணம் வசூலித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தற்போது மூன்று அவித்த முட்டைகளுக்கு நட்சத்திர ஓட்டலில் தன்னிடம் இருந்து சுமார் 1600 ரூபாய் கட்டணம் வசூலித்ததாக ரசீதுடன் இசை அமைப்பாளர் சேகர் ராவிஜயானியின் ட்விட்டர் பதிவு வைரளாகி வருகிறது. 



இந்தி திரையுலகின் இசை அமைப்பாளரான சேகர் ராவிஜயானி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஹயாத் ரீஜென்சி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். பிறகு அங்கிருந்து அவர் புறப்பட்ட போது அறையில் தங்கியிருந்த சமயத்தில் அவர் சாப்பிட்ட 3 அவித்த முட்டைகளுக்கு ரூ.1350 கட்டணம் என்றும், ஜிஎஸ்டி ரூ.322 என்றும் கூறி, மொத்தமாக ரூ.1672 க்கு ரசீது வழங்கப்பட்டு கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான, ரசீதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மூன்று முட்டைகளுக்கு இவ்வளவு கட்டணமா? என இசை அமைப்பாளர் ராவிஜயானி கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்த ட்விட்டர் பதிவு இணையதளத்தில் வைரளாகி வருகிறது. இதுவரை 3000 க்கும் அதிகமானவர்கள் இதனை லைக் செய்துள்ளனர். இந்த ட்விட்டர் பதிவிற்கு பலரும் தன்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில கருத்துக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.