லாரிக்கு கீழ் சிக்கிய குழந்தை, நம்ப முடியாத அதியம்: திக் திக் வைரல் வீடியோ
![லாரிக்கு கீழ் சிக்கிய குழந்தை, நம்ப முடியாத அதியம்: திக் திக் வைரல் வீடியோ லாரிக்கு கீழ் சிக்கிய குழந்தை, நம்ப முடியாத அதியம்: திக் திக் வைரல் வீடியோ](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2023/04/21/285352-accident.jpg?itok=K2SUXcFP)
Shocking Viral Video: நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒரு விபத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.
வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சாலையில் நடந்து செல்லும் போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்க எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும்போது அலட்சியமாக இருந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். எனினும், சில விபத்துகளில் சந்தர்பத்தை தவிர வெறு யாரையும் குற்றம் கூற முடியாது. பல சாலை விபத்துகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இவை நமக்கும் ஒரு எச்சரிக்கையாக செயல்படுகின்றன. சமீபத்தில் இதுபோன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பலமுறை விபத்துகளில் சிலர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால், பல அதிசயிக்கும் சம்பங்களும் விபத்துகளில் நடப்பதுண்டு. பயங்கர விளைவுகள் ஏற்பட்டிருக்க வேண்டிய இடங்களில் அதிர்ஷ்டவசமாக அதில் சிக்கும் நபர்கள் தப்பித்துவிடுவதும் உண்டு. இப்படிப்பட்ட சம்பவங்கள் நம் முகத்தில் புன்னகையையும் மனதில் நிம்மதியையும் வரவழைக்கின்றன.
சமீபத்தில், இதுபோன்ற ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில் ஒரு சிறு குழந்தை பயங்கரமான ஒரு விபத்தில் மாட்டி, அதிசயமாக உயிர் பிழைத்தது. இதைப் பார்த்த பிறகு, பயனர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
வாகனத்தின் அடியில் சிக்கிய குழந்தை
சமூக ஊடகங்களின் பல தளங்களில் வைரலாகும் வீடியோவை பயனர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவில், விளையாடிக் கொண்டிருந்த சிறு குழந்தை திடீரென சாலையைக் கடக்க முன்னோக்கி நகர்கிறது. அதே சமயம், எதிரே வரும் கனரக வாகனம் ஒன்று அதன் மீது செல்கிறது. வீடியோவைப் பார்த்த பயனர்களின் நெஞ்சம் ஒரு நிமிடம் நின்று விடுகிறது.
மேலும் படிக்க | ஸ்கர்ட் அணிந்து மெட்ரோ பயணம் செய்த இளைஞர்கள்: குழம்பிய பயணிகள், வைரலான வீடியோ
ஆனால், வாகனம் அந்த குழந்தையை கடந்துசென்ற பிறகு, குழந்தை முற்றிலும் நல்ல நிலையில் இருப்பது தெரியவருகிறது. வாகனம் குழந்தையை கடந்து சென்றவுடன் அங்கிருந்தவர்கள் குழந்தையை தூக்க ஓடுகிறார்கள். குழந்தை எந்தவித சேதமும் இல்லாமல் சாதாரணமாக இருப்பதை பார்த்து அவர்களாலும் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. குழந்தையை தூக்கி அணைத்து கொஞ்சத் தொடங்குகிறார்கள்.
நம்ப முடியாத அந்த வீடியோவை இங்கே காணலாம்:
வீடியோ 5 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது
இந்த வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகின்றது. ட்விட்டரில் @cctvidiots என்ற கணக்கு மூலம் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தி எழுதும் நேரம் வரை, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் சுமார் 50 லட்சம் வியூஸ்களையும் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'குழந்தைகள் சாலைகளில் எப்போதும் பெரியவர்களின் மேற்பார்வையில் இருக்க வேண்டும்' என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். 'அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் அந்த குழந்தையுடன் இருந்துள்ளது' என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | அடுப்பு இல்லாமல் ஆம்லெட் சமைத்த நபர்..! - வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ