போபால்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், ஒரு வினோதமான நிகழ்வு நடந்துள்ளது. இதைப் பற்றி கேள்விப்படுபவர்களுக்கு அழுவதா, சிரிப்பதா அல்லது வியப்பதா என்று தெரியவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தூரில் (Indore) கோடீஸ்வரர் ஒருவரின் மனைவி, தன்னை விட 13 வயது இளைய ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனருடன் ஓடிப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நகரின் கஜ்ரானா பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.


அந்த கோடீஸ்வரர், ரூ.47 லட்சத்துடன் வீட்டில் இருந்து மனைவி காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.


முதற்கட்ட தகவல்களின்படி, கோடீஸ்வரரின் மனைவி அந்த ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரின் ஆட்டோவில் அடிக்கடி பயணித்துள்ளார். இந்த பயணங்களின் போது இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு அது ஒரு உறவாக மாறியதாக கூறப்படுகின்றது. குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த பெண்ணை அக்டோபர் 13 முதல் காணவில்லை.


ALSO READ: Viral Video: வேற லெவலில் ஆட்டோ ஓட்டி கின்னஸ் சாதனை செய்த சென்னை ஆட்டோகாரர்


இதற்கிடையில், இந்தூர் போலீசார் (Police) இது குறித்து விசாரணை நடத்தி கோடீஸ்வரரின் மனைவி மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும்  கந்த்வா, ஜாவ்ரா, உஜ்ஜைன் மற்றும் ரத்லாம் ஆகிய இடங்களுக்கு பயணித்ததாக போலீசார் தடம் அறியும் உத்திகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.


அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட பெண் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரைக் கண்டுபிடிக்க போலீஸார் தொடர்ந்து இந்த பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.


குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ டிரைவர் இம்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு வயது 32. அவரது குடியிருப்பு முகவரி பற்றி இன்னும் தெரியவில்லை.


இம்ரானின் நண்பரின் வீட்டில் இருந்து ரூ.33 லட்சம் பணத்தையும் போலீசார் மீட்டுள்ளனர். எனினும், கோடீஸ்வரரின் மனைவியும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரும் (Auto Driver) இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்களை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


அந்த பெண்ணின் கணவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்துக்கு சொந்தக்காரர் என்று தகவல்கள் கூறுகின்றன.


ALSO READ: ஆட்டோவில் நடந்த பிரசவம், ஆண்டவனாய் மாறிய ஆட்டோ ஓட்டுனர்: தாயும் சேயும் நலம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR