புதுடெல்லி: ஒருதலை காதல் மீண்டும் ஒரு முறை மற்றொரு உயிரை காவு வாங்கியுள்ளது. இம்முறை புது டெல்லியில், 23 வயதான ஒரு பெண் திங்கள்கிழமை நள்ளிரவு கொல்லப்பட்டார்.
அவரை ஒருதலைபட்சமாக காதலித்த ஒரு நபர், அவர் தன் காதலுக்கு ஒப்புக்கொள்ளாததால் கோவப்பட்டு அந்த பெண்ணை கொன்றார்.
அந்த பெண் ஒரு நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள இரவு சுமார் 11 மணிக்கு நண்பரின் வீட்டுக்கு சென்றார். ஆனால், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவரது வீட்டுக்கு 300 மீட்டர் தொலைவில், ஓம் விஹார் பகிதியில், அவர் மூன்று நபர்களால் தாக்கப்படுவதை ஒரு டெலிவரி பாய் கண்டுள்ளார்.
மேற்கு டெல்லியில் (Delhi) உத்தம் நகர் அருகே ஓம் விஹாரில் உள்ள மதியலா சாலையில் நடந்த சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்ததையும் அருகில் ஒருவர் கத்தியுடன் நின்றுகொண்டிருந்தததையும் போலீசார் கண்டனர். அந்த பெண் டோலி பாபர் என்றும் அவர் ஒரு ஃப்ரீலான்ஸ் நிகழ்ச்சி அமைப்பாளராக பணிபுரிந்து வந்தார் என்பதும் பின்னர் தெரிய வந்தது.
டோலியின் காதலனிடமிருந்து தனக்கு போன் வந்ததாகவும், “காபா தன்னை துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகிறான் என டோலி என்னிடம் போனி கூறினாள்” என்று அவர் கூறியதாகவும் டோலியின் சகோதரர் லக்ஷய் தெரிவித்தார்.
"சிறிது நேரத்தில் டோலியின் தொலைபேசி அமைதியாகிவிட்டது. சிறிது நேரம் கழித்து, அவரது கைகள், கழுத்து, மார்பு மற்றும் முதுகில் குத்தப்பட்டு காயங்களுடன் அவர் ரத்த வெள்ளத்தில் இருக்கிறார் என போலீஸ் அதிகாரி ஒருவர் வீட்டுக்கு வந்து கூறினார்” என்றார் அவர்.
ALSO READ: காதலன் - காதலி சண்டை; செல்போனால் மண்டையை உடைத்த காதலி
25 வயதான காபா பல ஆண்டுகளாக டோலியைப் பின்தொடர்ந்தார் என்று அவரது சகோதரர் கூறினார். ஆனால் டோலி தொடர்ந்து அவரை நிராகரித்து வந்தார். இதை டோலியின் ஒன்றுவிட்ட சகோதரி சஞ்சனாவும் உறுதிபடுத்தினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் காபாவின் சகோதரியுடன் தான் கொண்டிருந்த காதலும் இந்த கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் லக்ஷய் தெரிவித்தார்.
டோலியின் தாயார் மீனா பாப்பார், நண்பரின் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இரவு 11 மணியளவில் வீட்டை விட்டு டோலி சென்றதாக கூறினார். "கவலைப்பட வேண்டாம், நான் அதிகாலை 1 மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவேன்” என்றும் அவள் என்னிடம் கூறினாள் என்றார் அவரது தாயார்.
அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது:
அதிகாலை 1.30 மணியளவில், போலீசார் (Police) வந்து டோலியின் குடும்பத்திடம் இந்த கொடூரமான செய்தியை கூறினர். டோலி தன் குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொண்ட ஒரு உறுதியான பெண் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். ஊரடங்கில் அவர் தன் வேலையை இழந்ததாகவும் ஆனால், இப்போது மெல்ல மறுதொடக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. டோலியின் தந்தை ஆட்டோரிக்ஷா ஓட்டுகிறார்.
டோலி கொல்லப்பட்ட (Murder) இடம் சமூக விரோதிகளின் சந்திப்பு இடமாக கூறப்படுகிறது. பாபாரின் பக்கத்து வீட்டுக்காரர் கூறுகையில், "நாங்கள் அங்கு ஒரு சிசிடிவி கேமராவை வைத்தோம். ஆனால் யாரோ அதை திருடி விட்டார்கள். ஒவ்வொரு நாளும், சிலர் அங்கு வந்து மதுபானம் அருந்துகிறார்கள். நாங்கள் அதைப் பற்றி கேட்டால் எங்களை மிரட்டுகிறார்கள். அவர்களில் பலர் இந்த தாக்குதலைப் பார்த்ததாக அண்டை வீட்டார் கூறினர். ஆனால் தங்கள் சொந்த பாதுகாப்புக்காக பயந்து டோலியின் உதவிக்கு யாரும் செல்லத் துணியவில்லை.” என்றார்.
குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களில் ஒருவர் குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் வசிக்கிறார். இருப்பினும், அவரது சகோதரி, “என் சகோதரர் டோலியை கொன்றிருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். அவர் அவளை ஒரு சகோதரியாகக் கருதி அவளிடமிருந்து ஒரு ராக்கி கட்டிக்கொண்டார். அவர் வீட்டை விட்டு வெளியே சென்றது உண்மைதான். இன்னும் அவர் திரும்பவில்லை.” என்று கூறியுள்ளார்.
குற்றம் நடந்த இடத்தில் காபா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள், இருந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். சங்கர் சவுத்ரி, டிசிபி (துவாரகா), "அந்த பெண்ணை அவரது முன்னாள் காதலன் கொலை செய்துள்ளார். இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
ALSO READ: திண்டுக்கலில் தலை துண்டித்து வாலிபர் கொடூரக் கொலை; 6 பேர் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR