போலி சான்றிதழ் மூலம் வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியில் சேர்ந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து பட்டம் வாங்கிய இளைஞர்கள் இங்கு உள்ள மத்திய அரசு நிறுவனங்களிலும் ரயில் துறைகளில் எளிதாக வேலையில் சேர முடிவதில்லை. வடமாநிலத்தவர்கள் அதிகம் சேர்க்கப்படுகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்தது போல போலி சான்றிதழ் தயார் செய்து, வட மாநிலத்தினர் மத்திய அரசு பணிகளில் சேர்ந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தமிழகத்தில் உள்ள கிராம தபால் நிலைய ஊழியர்கள் பணிக்கும், சி.ஆர்.பி.எப். மற்றும் ரெயில்வே பணிக்கு வடமாநிலத்தினர் சிலர், குறிப்பாக பீகார், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பலர் 10-ம் வகுப்பு போலி மதிப்பெண் சான்றிதழ்களை கொடுத்து சேர்ந்ததாக புகார்கள் எழுந்துள்ளது. அந்த சான்றிதழில் ‘ஸ்டேட் போர்டு ஆப் ஸ்கூல் எக்சாமினேசன்ஸ் அன்ட் போர்டு ஆப் ஹையர் செகன்டரி எக்சாமினேசன்ஸ் தமிழ்நாடு’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | அமைச்சர் ஆய்வு... ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை


அந்த வகையில் இந்த சான்றிதழில் ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு சம்பந்தப்பட்ட மத்திய அரசு துறைகளில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.அதன் அடிப்படையில் அரசு தேர்வுத்துறை ஆராய்ந்து பார்த்ததில், அவை போலியான மதிப்பெண் சான்றிதழ் என்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களின் போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வியின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை உடன் இணைந்து சான்றிதழை சரிபார்த்து விசாரித்து வருகிறார்கள்.


அந்த வகையில் சுமார் 300க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர், இது போல போலி சான்றிதழ்கள் மதிப்பெண்களை பயன்படுத்தி பல்வேறு மத்திய அரசு பணியில் சேர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பணியாற்றி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இடையில் போலி சான்றிதழ் கொடுத்து மத்திய அரசு பணியில் சேர்ந்ததாக கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | சடலத்துடன் ஓரினச்சேர்க்கை - சைக்கோ வாலிபர் அடித்துக் கொலை..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR