சீன டிக்டாக் ஸ்டார் சியாவோ கியூமி கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்துவந்தார். கிரேன் கேபினுக்குள் லைவ்ஸ்ட்ரீம் வீடியோவை படமாக்கிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

23 வயதான சியாவோ கியூமி 160 அடி உயரத்தில் கிரேனில் இருந்தபோது வீடியோ பதிவு செய்துக் கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்து இறந்தார். 


தி சன் (The Sun) பத்திரிகையின் படி, ஜூன் 20 அன்று மாலை 5:40 மணியளவில் கிரேனில் இருந்த சியாவோ கீழே விழுந்தபோதும் தன்னுடைய மொபைல் போனை வைத்திருந்தார் என்று சொல்கிறது. அதாவது அவர் 160 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தபோது கூட தனது மொபைல் போனை கைதவற விடவில்லை. மொபைல் மீதான மோகம் படுத்தும் பாடு, உயிரையே பலி வாங்கிவிட்டது.


Also Read |சீனாவில் 300 அடி உயரத்திற்கு வீசும் மணல் புயல்! மக்கள் அவதி


இந்த விபத்து நடைபெற்றபோது, சியாவோவின் சக ஊழியர்களில் பெரும்பாலோர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். சியாவோவின் குடும்பத்தினர் அவரது மரணத்தை உறுதிப்படுத்தினர்கள். கால் தவறியதால் விழுந்ததாகவும், இணைய ஸ்டண்ட் (internet stunt) காரணமாக அல்ல என்றும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.


ஆனால், இந்த மரணம் தொடர்பாக ஒரு குழப்பமான வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது, கிட்டத்தட்ட 160 அடி கிரானில் இருந்து கீழே விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் டிக்டாக் பிரபலம் தன்னைப் படம்பிடிப்பதை அந்த வீடியோ காட்டுகிறது என்று ஸ்போர்ட்ஸ் கீடா (SportsKeeda) செயலி தெரிவித்துள்ளது. சியாவோ பேசும் காட்சி தொடங்கிய சில விநாடிகளில் கேமரா திடீரென கீழே இறங்கி, கிரேன் கருவிகளை காட்டுகிறது. 



டிக்டாக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட, சியாவோ கியூமி சீனாவில் மிகவும் பிரபலமான டிக்டோக் கலைஞர்களில் ஒருவர். டூயின் (Douyin) எனப்படும் டிக்டோக்கின் சீன பதிப்பில் @Xiaoquimei என்ற பயனர் பெயரால் பிரபலமானவர் சியாவோ.


Also Read | தனது படத்தை மூக்கால் வரைந்த ரசிகரை பார்த்து அசந்து போன நடிகர் சூர்யா!


இரண்டு குழந்தைகளின் தாயான சியாவோ, தனது அன்றாட வாழ்க்கை மற்றும் தொழில் குறித்த வீடியோக்களை தொடர்ந்து டிக்டாக்கில் பகிர்ந்து வந்தார். அவரது நடன வீடியோக்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.


பிரபல டிக்டாக் ஸ்டாரின் மரணத்திற்கு பலரும் கண்ணீருடன் இரங்கல் தெரிவிக்கின்றனர். அவரது ரசிகர்களை இந்த மரணச் செய்தி புரட்டி போட்டுவிட்டது.


முன்னதாக, ஹாங்காங்கைச் சேர்ந்த 32 வயதான சோபியா சியுங், ஜூலை 10 ஆம் தேதி நீர்வீழ்ச்சிக்கு அருகே இன்ஸ்டாகிராம் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | தெருக்களில் ஊர்ந்து சென்ற முதலையால் மக்கள் பீதி -Video


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR