வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்கு வீடியோகளுக்கென இணையத்தில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். 


சில சமயங்களில் இவை சாலையில் செல்பவர்களின் பொருட்களை இழுக்கின்றன, அவர்களில் ஆடைகளை பிடித்து இழுக்கின்றன. சில சமயம் குரங்குகள் மனிதர்களின் தோள்களில் ஏறி ஒய்யாரமாய் சவாரி செய்வதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால், சமீபத்தில் மிகவும் வித்தியாசமான ஒரு விடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதில் குரங்கு மதுபானம் அருந்துவதை காண முடிகின்றது. இதை பார்த்தால் நமக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. 


மது அருந்தும் குரங்கு 


இந்த வீடியோவை பார்த்த பிறகு, பல நெட்டிசன்கள் இந்த சம்பவத்திற்கு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோவில், மனிதர்களைப் போலவே ஒரு குரங்கு மது அருந்துவதைக் காண முடிகின்றது. வீடியோவில், குரங்கு பிளாஸ்டிக் டம்ளரை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறது. அதன் அருகில் மது பாட்டிலுடன் இருக்கும் ஒரு நபர் சிறிது சிறிதாக அந்த கப்பில் மதுவை ஊற்றுக்றார். 


மேலும் படிக்க | டிவியில் ஓடும் கால்பந்தாட்டத்தை நிறுத்த படாதபாடுபட்ட பூனை: வைரல் வீடியோ


குரங்கு ஒரு குடிகாரனைப் போல ஒரே மூச்சில் கிளாசில் உள்ள முழு மதுவையும் குடிக்கிறது. குடித்த பிறகு அது மீண்டும் கிளாசை முன் பக்கம் நீட்டி இன்னும் மது வேண்டும் என கேட்கிறது. பின்னர் அந்த நபர் மீண்டும் பாட்டிலிலிருந்து மதுவை குரங்கின் கிளாஸில் ஊற்றுகிறார். குரங்கு குடிக்கிறது. இப்படி மீண்டும் மீண்டும் நடக்கிறது. இப்படி பல முறை குடித்த குரங்கு கிளாசை கீழே வைத்துவிட்டு முற்றிலும் அமைதியாகிவிடுகிறது. 


சரக்கடித்த குரங்கின் விடியோவை இங்கே காணலாம்: 



இணையத்தில் வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமூக ஊடக தளமான ட்வுட்டரில் இது @HasnaZarooriHai என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்கள் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு காரசாரமாக, கண்டிக்கும் வகையில் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இந்த கொடிய குடிப்பழக்கத்தை விலங்குகளுக்கும் கற்றுத்தரும் மனிதர்களை இணையவாசிகள் கடுமையாக கண்டித்துள்ளார்கள். அப்பாவி மிருகங்களை இப்படிப்பட்ட பழக்கங்களுக்கு ஆளாக்கினால், அதன் விளைவை அந்த மிருகங்கள் மட்டுமல்ல, நாமும்தான் சந்திகக் நேரிடும் என்னும் கருத்தை பல நெட்டிசன்கள் வெளிப்படுத்தி உள்ளார்கள். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | கெத்தப் பாத்தீங்களா.. பானிபூரி சாப்பிடும் குரங்கின் ஸ்டைலான வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ