நாயுடன் ரீயூனியன்: முத்தமிட்ட நாய்... வாரி அணைத்த நபர்: நெட்டிசன்களை அழை வைத்த வைரல் வீடியோ

Emotional Dog Video: இந்த வீடியோவை ஒரு முறை பார்த்தால் நம்மால் மீண்டும் மீண்டும் பார்க்காமல் இருக்க முடியாது என்பது உண்மை!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 22, 2023, 11:13 AM IST
  • மனதை கொள்ளை கொள்ளும் இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
  • இது சமூக ஊடகங்களில் பட்டையை கிளப்பி வருகிறது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
நாயுடன் ரீயூனியன்: முத்தமிட்ட நாய்... வாரி அணைத்த நபர்: நெட்டிசன்களை அழை வைத்த வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு. அதுமட்டுமல்ல, அது மிகவும் புத்திசாலியான விலங்காகவும் உள்ளது. நாயின் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. நாம் ஆச்சரியப்படும் பல விஷயங்களை செய்து நாய்கள் நம்மை அசத்துவது உண்டு. 

பொதுவாக நாய்கள் இருக்கும் வீடுகளில் அவை குடும்பத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகின்றன. நாய்களும் தங்கள் முதலாளிகள் மற்றும் அவை வளர்க்கப்படும் வீட்டு உறுப்பினர்கள் மீது அதிகப்படியான பாசத்தை பொழிகின்றன. சில சமயங்களில் நாய்கள் அன்பில் மனிதர்களையே மிஞ்சி விடுகின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக தற்போது ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்படுள்ளது.

இந்த வீடியோவில் பல நாட்களுக்குப் பிறகு தன் முதலாளியை காணும் நாய் அவர் மீது பாசத்தை பொழிவதை காண முடிகின்றது. அந்த நபரும் நாய் மீது எக்கச்சக்க பாசத்தை காட்டுகிறார்.

முதலாளிக்காக காத்திருக்கும் நாய்

இந்த வீடியோவில் ஒரு நாய் தன் முதலாளிக்காக மிக ஆவலுடன் வீட்டு வாசலில் காத்திருப்பதை காண முடிகின்றது. அந்த நாய் தன் முதலாளியை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திப்பதாக வீடியோவின் தலைப்பில் கூறப்பட்டுள்ளது. அன்பு ததும்பும் இந்த வீடியோவை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். அடுமட்டுமல்ல, இதை ஒரு முறை பார்த்தால் நம்மால் மீண்டும் மீண்டும் பார்க்காமல் இருக்க முடியாது என்பது உண்மை!!

அன்பை பொழியும் நாய், வாரி அணைத்த முதலாளி

மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வீடு திரும்பும் தனது முதலாளியை காண நாய் ஒன்று வீட்டு வாசலில் ஆவலாக காத்திருப்பதை வீடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. முதலாளியை காண வேண்டும் என்ற ஆசையும் தவிப்பும் அதன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிகின்றது. முதலாளியின் கார் வந்து நின்ற உடன் அது நிலை கொள்ளாமல் தவிக்கிறது. முதலாளியை காண வேண்டும் என்ற அதன் ஆவல் அதிகமாகிறது. நாயின் அருகில் இருந்த நபர் கதவை திறந்து விடுகிறார். 

அதே வேளையில் முதலாளியும் கார் கதவை திறந்துகொண்டு வெளியே வருகிறார். அவரை கண்டவுடன் நாய் வேகமாக ஓடிச்சென்று அவரை கட்டிக்கொள்கின்றது. அதற்கு சந்தோஷத்தில் ஒன்றும் புரியவில்லை. அது அங்கும் இங்குமாய் ஓடி தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டுகிறது. மீண்டும் மீண்டும் தன் முதலாளியிடம் வந்து பாசத்தை பொழிகிறது. 

மேலும் படிக்க | என்னவொரு வேகம்.. பயங்கரமாக மரம் ஏறும் மலைப்பாம்பு: வைரல் வீடியோ

அந்த நபருக்கும் நாயை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி, அவர் நாயை வாரி அணைத்துக்கொள்கிறார். நாயின் சந்தோஷமும் பாசமும் அவருக்கு புரிகிறது. இந்த வீடியோவை காணும் அனைவரும் இந்த மகிழ்ச்சி நிறைந்த தருணத்தில் தாங்களும் இணைந்து விடுகிறார்கள். 

நாயின் மனதை அள்ளும் அன்பின் வெளிப்பாட்டை இங்கே காணலாம்:

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது

மனதை கொள்ளை கொள்ளும் இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இது சமூக ஊடகங்களில் பட்டையை கிளப்பி வருகிறது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள்.

‘அப்படி ஒரு நாய் எனக்கும் வேண்டும்.. என்ன ஒரு அன்பு!!’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘இந்த நாய் மற்றும் அதன் முதலாளியின் பாசத்தை பார்த்தால் தந்தை மகனுக்கு இடையில் உள்ள உறவு போல உள்ளது’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ஆர்வக்கோளாறுக்கு ஒரு அளவில்லையா? கதறும் நெட்டிசன்ஸ்: சைன் போர்டில் புஷ் அப்.. வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News