`ஒயின் போல சுவை` 4 வருடங்களாக தன் சிறுநீரை பருகி வரும் பெண் - Viral News
ஒரு நாளைக்கு சுமார் 5 கிளாஸ் சிறுநீரைக் குடிப்பதாகவும், இப்போது சிறுநீர் குடிப்பது சகஜமாகிவிட்டது என்கிறார் அவர். இப்போது அவரால் அது இல்லாமல் வாழ முடியாது என்பதுதான் பிரச்சனை!
இந்த உலகில் சிலரின் பொழுதுபோக்குகள் மிகவும் விசித்திரமானவையாக இருக்கிறது. சிலரின் பொழுது போக்குகளை நீங்கள் அறிந்தால் அதிர்ச்சியில் உறைந்து போவீர்கள். மேலும் சிலர் விசித்திரமான விஷயங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள முயற்சிகளை எடுத்து வருபவர்களும் உள்ளனர். பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்கள் அந்தப் பழக்கத்திக்கு அடிமை ஆகிவிடுகிறார்கள். அதை அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணை பற்றி தான் இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.
அதாவது கடந்த நான்கு வருடங்களாக தனது சிறுநீரையே விரும்பி குடித்து வருகிறார். அது அவருக்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது. வாருங்கள் முழு விவரம் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
53 வயதான இந்த பெண்ணின் பெயர் கேரி என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்தவர். சமீபத்தில், ஒரு நேர்காணலின் போது, அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தனது சிறுநீரை குடிப்பதாக கூறினார்.
ALSO READ | Bizzaire Divorse: தினமும் குளிக்காத மனைவியை விவகாரத்து செய்யத் துடிக்கும் கணவன்
சிறுநீர் குடிப்பது சகஜம்:
ஒரு நாளைக்கு சுமார் 5 கிளாஸ் சிறுநீரைக் குடிப்பதாக அவர் கூறினார். இப்போது சிறுநீர் குடிப்பது தனக்கு சகஜமாகிவிட்டது என்கிறார். இப்போது அவரால் அது இல்லாமல் வாழ முடியாது என்பதுதான் பிரச்சனை. இது எப்படி தொடங்கியது என்று கேட்டபோது, மெலனோமா புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தபோது சிறுநீர் குடிக்க ஆரம்பித்ததாக அவர் கூறினார்.
சிறுநீர் ஒயின் போல சுவையாக இருக்கிறது:
சூடான சிறுநீரைக் குடித்தால், மிகுந்த நிவாரணம் பெறுவதாக கேரி கூறுகிறார். அதே நேரத்தில், அவர் சிறுநீரை குடிக்கும் சோதனை குறித்து சில சிரமங்களையும் சந்திப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது கெர்ரி எதையாவது சாப்பிட்டால் அதில் சிறுநீர் வாசனை வருகிறது என்று தெரிவித்துள்ளார். அதேபோல ஒவ்வொரு முறையும் சில சிரமங்கள் ஏற்படுவதாகவும் கூறினார். சில நேரங்களில் சிறுநீர் ஒயின் போல சுவையாக இருக்கிறது.
ALSO READ | Facebook பயன்படுத்தினா, என்னை அறைய ரெடியா? மணிக்கு $8 சம்பளம்!
தலைமுடியில் சிறுநீர் தடவுகிறேன்:
சிறுநீரை குடிக்க ஆரம்பித்ததில் இருந்து மிகவும் நிம்மதியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ஆச்சர்யம் என்னவென்றால், சிறுநீரைக் குடிப்பது மட்டுமின்றி, தலைமுடியில் தடவுவதுடன், கண்களுக்குக் கீழே பேஸ்மசாஜ் செய்யவும் பயன்படுத்துகிறார்.
ALSO READ | Love Rules: காதலிக்காக காதலன் உருவாக்கிய 11 விதிமுறைகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR