ஆபத்தான பாம்பை அசால்ட்டாக டீல் செய்த பிரபல பவுலர்... ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பித்தார்!
McCragath Python Video: பிரபல ஆஸ்திரேலிய மூத்த வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் அவரது வீட்டில் புகுந்த ஆபத்தான மலைப்பாம்பை அசலாட்டாக அப்புறப்படுத்திய வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
McCragath Python Video: பாம்பு என்று சொன்னால் படையே நடுங்கும் என சொல்வார்கள். உலகின் மிகவும் விசித்திரமான மற்றும் ஆபத்தான உயிரினங்களில் பாம்புகளும் முதன்மையாக உள்ளன. இவை எண்ணிக்கையில் சற்று அதிகமாகவே இருக்கிறது. காட்டுப் பகுதிகள், மனித நடமாட்டம் குறைவான இடங்களில் இவை அதிகம் தென்பட்டாலும், குடியிருப்பு பகுதிகளில் அவ்வப்போது நுழைவதும், மனிதர்கள் அதை கண்டு அஞ்சுவதையும் நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள்.
அப்படி பாம்பு வீட்டில் நுழைந்துவிட்டாலும், பாம்பை முறையாக கையாள தெரிந்திருக்க வேண்டும். பாம்பிடம் அத்துமீறுவதோ அதனை அச்சமூட்டுவதோ உங்களுக்கு தான் ஆபத்தை விளைவிக்கும். முடிந்தளவு பாம்புகளை கையாள தீயணைப்பு துறையையோ அல்லது பாம்பு பிடி வல்லுநர்களையோ அழைப்பது தான் சரியான முடிவாக இருக்கும்.
இருப்பினும், சிலர் அவர்களின் பாதுகாப்புக்காக விரைவாக பாம்பை வெளியேற்ற அவர்களே செயலில் இறங்கும் முடிவை கையில் எடுக்கின்றனர். அந்த வகையில், ஒரு பிரபலமும் தனது வீட்டில் புகுந்த பாம்பு ஒன்றை தானே அப்புறப்படுத்தும் வீடியோ ஒன்றை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரின் அத்தகைய ஆபத்தான செயல் இணையவாசிகளையும் அவரது ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும் படிக்க | பாம்பை கைமா பண்ணத் துடிக்கும் முதலை! உன்னை பிரியாணி போடறேன்! சீறும் பாம்பு
ஆஸ்திரேலிய அணியின் மூத்த கிரிகெட் வீரரான கிளென் மெகாராத் தான் இத்தகைய ஆபத்தான செயலை செய்தவர். அவரது மனைவி அந்த வீடியோவை எடுத்துள்ளார். அவர் அந்த வீடியோவில், அவரது வீட்டில் புகுந்த பாம்பு ஒன்றை, வெறும் வீடும் துடைக்க பயன்படும் மாப்பை வைத்து அப்புறப்படுத்துவதை காணலாம். எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஆபத்தான பாம்பை அவர் கையாண்ட விதம் நெட்டிசன்களை அச்சமடைய செய்தது.
குறிப்பாக, இரண்டு மூன்று முறை அந்த பாம்பை மாப் குச்சியை வைத்து தூக்க முயன்றபோது, அது சீற்றமடைந்து அவரை தாக்க முற்பட்டது பதைபதைப்பை ஏற்படுத்தியது. அவரது மனைவியும் அவரை எச்சரிப்பதை வீடியோவில் கேட்க முடிகிறது. இருப்பினும், மிகவும் பொறுமையாகவும், நேர்த்தியாகவும் செயல்பட்ட மெக்ராத் பாம்பை லாவகமாக தூக்கி, வெளியே கொண்டு சென்றார்.
மெக்ராத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அந்த வீடியோவை,"மனைவி சரலேயனின் ஏராளமான ஊக்கம் மற்றும் ஆதரவால் வீட்டில் இருந்த 3 கோஸ்டல் கார்பட் மலைப்பாம்புகளை பாதுகாப்பாக வெளியே இருக்கும் புதர்களில் விடப்பட்டது" என பதிவிடப்பட்டது. வீடியோவில் ஒரு பாம்பை மட்டும் காட்டினாலும், அவர் மூன்று பாம்பை வெளியேற்றியதாக இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.
வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த வகையில், கடந்த 1999, 2003, 2007 உலகக் கோப்பை தொடர்களை ஆஸ்திரேலியா வெல்ல முக்கியமானவராக மெக்ராத் இருந்தார். குறிப்பாக, உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் அவர் தான் முதலிடத்தில் உள்ளார். வெறும் 39 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 1993ஆம் ஆண்டு தொடங்கிய மெக்ராத்தின் பயணம் 2007ஆம் ஆண்டு நிறைவுபெற்றது. அதுவரை அவர் டெஸ்டில் 563 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 381 விக்கெட்டுகளையும், 2 டி20 போட்டிகளில் விளையாண்டு 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ