புதுடெல்லி: நாம் நமது தினசரி வாழ்வில் பலவித வினோத நிகழ்வுகளைக் காண்கிறோம். அப்படிப்பட்ட ஒரு வெட்கக்கேடான அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் (Uttar Pradesh) முசாபர்நகரைச் சேர்ந்த ஒரு கும்பல், அவர்கள் வழங்கும் அடியாள் சேவைகளுக்கான கட்டண விகித அட்டவணையை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பதிவில் ஒரு இளைஞர் இது தொடர்பான பல புகைப்படங்களை பதிவேற்றியதோடு ஒரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு காணப்படுகிறார். தன்னுடைய அடியாள் கும்பல் வழங்கும் 'சேவைகளின்' கட்டண விகித விளக்கப்படத்தை அவர் வெளியிட்டார்.


தங்கள் கும்பலுக்கு பணம் கொடுத்தால், சண்டைகள், அடி உதை, கடத்தல், மிரட்டல் அளிப்பது, கொலை ஆகியவற்றையும் செய்வதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மிரட்டல்களை வழங்க 1000 ரூபாய், அடி உதைக்கு 5000 ரூபாய், அடித்து காயப்படுத்த 10,000 ரூபாய், கொலைக்கு 55,000 ரூபாய் என்று கட்டணத் தொகை வசூலிக்கப்படும் என அந்த கும்பல் வெளியிட்டுள்ள அட்டவணையில் மேலும் விளக்கப்பட்டுள்ளது.


ALSO READ: Shoot your shot': பராக் ஒபாமாவின் basketball viral video


இந்த போஸ்ட், சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட பின்னர், காவல்துறையினர் இது குறித்து விசாரித்து இந்த இடுகையை பதிவேற்றிய இளைஞரைத் தேடினர்.


இதையடுத்து இந்த இளைஞர் சரதவல் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த சவுக்கடா கிராமத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டார்.


சதர் காவல் நிலைய சி.ஓ. குல்தீப் குமார், வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ள கீழ்த்தரமான இந்த இடுகை குறித்து காவல்துறைக்கு தெரியவந்தவுடன், இது குறித்து விசாரணை தொடக்கப்பட்டது என்று கூறினார். விரைவில் இந்த வழக்கில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


புகைப்படத்தில் காணப்பட்ட இளைஞன் பிஆர்டி ஜவானின் மகன் என்று கூறப்படுகிறது.


இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் (UP Police) தெரிவித்தனர்.


ALSO READ: பணத்துக்கு பதில் தேங்காயை fees-ஆக வாங்கி மாணவர்களை நெகிழ வைத்த கல்லூரி!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR