பேய், பூதம் இதெல்லாம் உண்மையா, நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா என்பது எல்லாம் வேறு விஷயம். சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோவைப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிக்டோக் வீடியோவில் பதிவு செய்யப்பட்ட இந்த சம்பவத்தில், ஜிம் தரையில் படுத்திருக்கும் ஒரு நபர் இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டுகிறது. யாரும் அவரை இழுத்துச் செல்லாத நிலையில் அவரை இயக்குவது யார்? பேயா? இந்த கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை.


பயமுறுத்தும் வீடியோ, ஜிம்மில் (@carlosruizoficiall/TikTok) 'கண்ணுக்கு தெரியாத சக்தியால்' மனிதன் இழுக்கப்படுவதைக் காட்டுகிறது.


ஜிம்மில் ஒரு மனிதனை ஏதோ ‘கண்ணுக்கு தெரியாத சக்தி’ இழுத்துச் செல்லும் ஒரு திகிலூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யத் தயாராகும் போது வீடியோ தொடங்குகிறது. அவர் ஜிம்மில் தனியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ:  Destination Wedding! தண்ணீர் சாட்சியாக நடைபெறும் திருமணத்தின் வீடியோ வைரல்


திடீரென்று, TRX suspension தானாகவே முன்னும் பின்னுமாக மாறத் தொடங்குகிறது, அதை ஜிம்மில் இருக்கும் நபர் பார்க்கவில்லை. பின்னர் அதிக எடையுள்ள பந்து அவரை நோக்கி உருள்கிறது, அதே நேரத்தில் படிக்கட்டில் விளக்குகள் அணைந்து அணைந்து எரிகிறது...


ஜிம்மில் இருப்பவர் அங்கிருந்து வெளியேற பொருட்களைப் பிடிக்கிறார், ஆனால் தரையில் விழுகிறார். கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று, ஜிம்மின் தரையில் கிடக்கும் அவரை இழுப்பதைப் பார்க்க முடிகிறது. அதிலிருந்து விடுபட முயற்சிக்கும் அவருக்குக் அது மிகவும் சிரமமாக இருக்கிறது. தொடர்ந்து கண்ணுக்கு தெரியாத சக்தியிடம் இருந்து விடுபட முயற்சிக்கும் அவருக்கு ஒரு கட்டத்தில் வெற்றி கிடைக்கிறது. 


உடனே அடித்துப் பிடித்துக் கொண்டு அவர் வெளியே ஓடுகிறார். தன்னுடைய பொருட்களையும் எடுக்காமல், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறார்.


டிக்டாக்கில் @carlosruizoficial என்ற கணக்கில் இருந்து வெளியிடப்பட்ட வீடியோ, 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. ஃபேட் டிசைட் என்ற ஒரு யூடியூப் சேனலும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. 



"டிக்டோக்கில் ஒரு மனிதன் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்ய முயன்றபோது சில பயங்கரமான நிகழ்வுகள் நடக்கத் தொடங்கியது. கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தியால் அவர் இழுத்துச் செல்லப்படுவது தெரிகிறது. 


”திகிலூட்டும் வீடியோவைப் பாருங்கள். இது அமானுஷ்யமா? அல்லது டிக்டாக் வீடியோவில் இருக்கும் காட்சிகள் போலியானவையா?” என்ற கேள்வியுடன் வீடியோ யூடியூபில் பகிரப்பட்டுள்ளது.


இந்த வீடியோவுக்கு பல்வேறுவிதமான பின்னூட்டங்கள் வந்து குவிந்துள்ளன. சிலர் பயப்படுகின்றனர். சிலர் வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று சொல்கின்றனர். எதுஎப்படியிருந்தாலும், அந்த வீடியோ நிச்சயம் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது. 


ALSO READ: "மெல்ல மெல்ல வரலாற்றில் காணாமல் போவோம்” : ஆப்கான் பெண்ணின் உருக்கமான வீடியோ


அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அரங்கேற்றப்பட்ட நாடகமாகவும் இருக்கலாம் என்று ஒரு பயனர் கருத்திட்டுள்ளார்.  "இது அரங்கேற்றப்பட்டதாகத் தெரிகிறது, அவர் ஏன் தனியாக இருந்தார், கண்ணாடியைப் பார்ப்பதைத் தவிர அவர் ஏன் வேறு எதுவும் செய்யவில்லை? அவர் கண்ணாடியில் பார்ப்பதற்கு முன்பே கயிறுகளை அசைக்கத் தொடங்கினாரா? யாராவது திரைக்கு வெளியே இருந்தார்களா? எனக்கு தெரியாது. அமானுஷ்யமாக, ஒரு பேயா அங்கிருந்தது, அல்லது ஒரு பொல்டர்ஜிஸ்ட் (poltergeist) இதன் பின்னணியில் இருக்கிறாரா? தரையில் இழுக்கப்படுவது போ அந்த நபர் நடிக்க முடியும் என்று நினைக்கிறேன். என்னுடைய யூகப்படி இந்த வீடியோ உண்மையானது அல்ல, நடித்து அரங்கேற்றப்பட்டது" என்று பயனர் தெரிவிக்கிறார்.


மற்றுமொருவரோ, "அவர் தவறான பிசாசுடன் ஒப்பந்தம் செய்திருக்கலாம். இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களைச் செய்த பலரை எனக்குத் தெரியும்” என்று சொல்கிறார். மற்றொருவர் நகைச்சுவையாக, "உங்களை விட பேய் அதிகமாக ஜிம்மிற்கு போகும் போல இருக்கிறது. உங்களுக்கு இன்னும் கொஞ்சம் உத்வேகம் வேண்டும்" என்று கருத்திட்டுள்ளார்.



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR