என்ன தைரியம் இருந்தா ‘இப்படி’ ஒரு வீடியோவை போடுவீங்க? கடுப்பாகும் நெட்டிசன்கள்
Scaring Leopard Video: கடவுளே! ‘இப்படி’ எல்லாம் வீடியோவை எடுத்து போடறா ஐடியா எங்க இருந்து கிடைக்குது? கடுப்பாகும் நெட்டிசன்கள் வைரலாக்கும் ‘உச்சா’ வீடியோ
சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் விதம் விதமாய் இருக்கின்றன. பல ஆச்சரியங்களை கொடுத்தால், சில அதிர்ச்சியைக் கொடுக்கின்றன. சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் ஆழ்ந்த சோகத்தையும் எற்படுத்துகின்றன. நவரசங்களையும் ஏற்படுத்தும் இந்த வீடியோக்கள், சில சமயம் பார்த்ததுமே வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன.
இணையத்தில் கிடைக்கும் எண்ணிலடங்கா விடியோக்களில், சில வீடியோக்கள் நம்மை குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கின்றன. அனால், சிரிக்க வைத்தாலும், செல்லத் திட்டு வாங்கிக் கொடுக்கும் வீடியோக்களையும் நெட்டிசன்கள் பதிவேற்றுகின்றனர்.
மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!
காட்டில் வாழும் விலங்குகளின் வாழ்க்கை எதிர்பாராத நிகழ்வுகளால் நிறைந்தது. அதைப் பார்க்க நமக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பாதால், அவை மிகவும் சுவாரஸ்யமானதாகவும், அதிகம் பகிரப்படும் வீடியோக்களாக மாறுகின்றன.. அதனால் தான் விலங்கு வீடியோக்கள் வைரலாவது இயல்பானதாக இருக்கிறது.
பெரும்பாலும் சமூக ஊடக தளங்களில் வைரலாகும் இந்த வகை வீடியோக்களை நெட்டிசன்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இப்படித் திட்டிக் கொண்டே பார்த்து வைரலாகும் வீடியோவில் இந்த ‘உச்சா’ வீடியோவும் ஒன்று.
வைரலாகும் ’உச்சா’ வீடியோவை கீழே காணலாம்:
வைரலான வீடியோவை பலரும் பார்த்து சிரித்து விட்டு, என்ன இருந்தாலும் இதெல்லாம் டூ மச் என்ற விமர்சனங்களுடன் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை இந்த ஜாலி வீடியோவை ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்துவிட்டனர்.
இறந்த உடலுக்குள் கலர் தண்ணீரை நிரப்பி வைத்திருப்பது தெரியாமல், இரை என்று நினைத்து உண்ணப்போன சிறுத்தை, இரையை கடித்ததும், பீறிட்டு வரும் தண்ணீரைப் பார்த்து அரண்டு மிரண்டு ஓடுவதைப் பார்த்தால் சிரிப்பு வராதா என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ