காட்டின் ராஜா என அழைப்படும் சிங்கத்தின் வலிமையை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதே போன்று முதலைகள் நீரிலும் நிலத்திலும் கடுமையாக தாக்கும் திறன் பெற்றவை. இரண்டுமே வாய்ப்பு கிடைத்தவுடன் எந்த மிருகத்தையும் வெற்றிகரமாக தாக்கி இரையாக்கி விடும். அதன் பிடியில் இருந்து தப்புவது மிகவும் கடினம். தற்போது வைரலாகி வரும் வீடியோவில், சிங்கத்திடம் தப்பிய எருமை மாடு ஒன்று முதலையிடம் சிக்கும் காட்சி நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. அதில் எருமையின் கழுத்தை தனது வாயால் முதலை கவ்விக் கொண்ட காட்சி மனதை பதற வைக்கும். இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
காடுகளில் உள்ள வலிமையான விலங்குகள் பலம் குறைந்தவர்களைத் தாக்கி இரையாவதை பல வீடியோக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் சில சமயங்களில் நாம் நினைத்ததற்கு மாறாக விஷயங்கள் நடக்கும் போது ஆச்சரியம் ஏற்படுவதை தடுக்க முடியாது. அதிர்ஷ்டவசமாக சிங்கத்திடம் இருந்து தப்பிய எருமை மாட்டை முதலை மூர்க்கமாக தாக்குவதை இந்த வைரலான வீடியோவில் காணலாம்.
மேலும் படிக்க | குட்டி யானைக்கு குசும்பு ஜாஸ்தி தான்... வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!
வைரலாகி வரும் வீடியோவைக் கீழே காணலாம்:
தற்போது அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிங்கம் ஒன்று எருமையை இரையாக்க துரத்துகிறது. தன்னை காப்பாறிக் கொள்ள தண்ணீருக்குள் குதித்த எருமை மாட்டை முதலை ஒன்று வேட்டையாடுவதை வீடியோவில் காணலாம். அந்த வீடியோவில், முதலை தாக்கும் விதத்தை பார்த்தால், எருமை மாடு உயிருடன் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த வீடியோ feline.unity என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது என்பதை அது பெறும் வ்யூஸ்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ