கான்பூர் வைரல் வீடியோ: கான்பூரில் நடந்த சம்பவம் குறித்த அதிர்ச்சியூட்டும் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் ஒரு நபர் இழுத்துச் செல்லப்படுவதைக் காணலாம். திங்கள்கிழமை மாலை கான்பூரில் லாரி மற்றும் கார் மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவல்துறை கோரிக்கை:
சாகேரி காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள ஓவர் பிரிட்ஜில் வேகமான கார் சென்றுடிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு வாலிபர் காரின் போனேட் தொங்கிக்கொண்டு செல்வதை காணலாம். இந்த வீடியோ வெறும் 11 வினாடிகள் மட்டுமே உள்ளது. ஆனால் இந்த வீடியோவை பார்ப்பவர்களின் இதயம் வேகமாக துடிக்கும். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதை அடுத்து, இந்த கார் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல்துறையினர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோபத்துடன் காரை ஏற்ற முயன்றார்:
காரின் மீது லாரி மோதியதை அடுத்து,  காரில் இருந்த இளைஞர்களுக்கும் டிசிஎம் டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கோபத்தில் இருந்த கார் டிரைவர், அவர் முன்னால் நின்றிருந்த டிரக் டிரைவர் மீது ஏற்ற முயன்றார். ஆனால் அவர் சாமர்த்தியமாக காரின் முன்பகுயை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். இதன் பின்னர் காரை ஓட்டிய இளைஞர் சாலையின் மேம்பாலத்தில் காரை வேகமாக ஓட்டிச்சென்றுள்ளார்.


ALSO READ | Video: கடலில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய துணிச்சலான நபர்; குவியும் பாராட்டு


இந்த சம்பவம் குறித்த ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதை அடுத்து, இந்த சம்பத்தில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பான தகவல்களை கிடைத்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று பொதுமக்களிடம் காவல்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். காவல்துறையு விசாரணையைத் தொடங்கியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR