Video: கடலில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய துணிச்சலான நபர்; குவியும் பாராட்டு

கேட்வே ஆஃப் இந்தியாவை சுற்றி பார்க்க அந்தப் பெண் சென்றிருந்தார். அவர் கடலின் அலைகளை ரசித்து வந்த நிலையில், திடீரென்று சமநிலையை இழந்ததால் கடலில் விழுந்தார். அந்த பெண் கடலில் விழுவதைப் பார்த்து, சுற்றியுள்ளவர்கள் உதவிக்காக கத்த ஆரம்பிக்கிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 13, 2021, 06:25 PM IST
Video: கடலில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய துணிச்சலான நபர்; குவியும் பாராட்டு title=

புதுடெல்லி: சில நாட்களுக்கு முன்பு, நாளில், மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் அனைவரையும் ஒரு நிமிடம் திகைத்துப்போனார்கள். கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெறவிருந்த ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

வைரலாகி வரும் வீடியோவில், ஒரு பெண் எதிர்பாராமல் திடீரென 20 அடி கீழே கடலில் விழுந்ததைக் காணலாம். அந்த பெண் விழுந்ததும் அங்கு இருந்தவர்களிடையே என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில், திடீரென அங்கு இருந்த 50 வயது நபர் ஒருவர் கடலில் குதித்து தனது உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாமல் அந்தப் பெண்ணைக் காப்பாற்றுகிறார்.

கேட்வே ஆஃப் இந்தியாவை சுற்றி பார்க்க அந்தப் பெண் சென்றிருந்தார். அவர் கடலின் அலைகளை ரசித்து வந்த நிலையில், திடீரென்று சமநிலையை இழந்ததால் கடலில் விழுந்தார். அந்த பெண் கடலில் விழுவதைப் பார்த்து, சுற்றியுள்ளவர்கள் உதவிக்காக கத்த ஆரம்பிக்கிறார்கள்.

 

அதே நேரத்தில், சம்பவ இடத்திலிருந்த சுற்றுலா புகைப்படக் கலைஞர் குலாப்சந்த் கோண்ட், அந்தப் பெண் நீரில் மூழ்குவதைக் கண்டு, கடலில் குதித்து அவரை காப்பாற்றினார். அந்த இடத்திலேயே இருந்தவர்களின் உதவியுடன், ஒரு கயிற்றின் மூலம் அந்தப் பெண்ணை கடலில் இருந்து மீட்டனர்.

புகைப்படக்காரரின் துணிச்சலைப் பார்த்து, அனைவரும் அவரைப் பாராட்டினார்கள். மேலும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ | viral: ஆண் நண்பருடன் ஜாலியாக இருக்கும் வீடியோவை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்

ALSO READ | செம கிளாமர் உடையில் பிக்பாஸ் ரைசா, வீடியோ வைரல்

Trending News