மூன்று பாம்புகளை விழுங்கி கக்கும் ராஜநாகம் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ
Viral Video : மூன்று பாம்புகளை முழுமையாக விழுங்கி கக்கும் ராஜ நாகத்தின் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
Viral Video : பாம்புகளிலேயே மிகவும் விஷம் கொண்ட ராஜநாகம் (King Cobra) ஒரே நேரத்தில் மூன்று பாம்புகளை விழுங்கி துப்பிய வீடியோ ஒன்று இப்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகியிருக்கிறது. பசிக்காக வேட்டைக்கு சென்ற அந்த பாம்பு, தன்னோட சொந்த இனமெல்லாம் என்று பார்க்காமல் மூன்று பாம்புகளை வேட்டையாடி இருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக பாம்புகளை அடுத்தடுத்து முழுங்கியிருக்கிறது. ஆனால் அதனால் செரிமானம் செய்ய முடியவில்லை என தெரிகிறது. இதனால் முழுங்கிய பாம்புகளை எல்லாம் கொஞ்ச நேரத்தில் கக்கியுள்ளது. இந்த வீடியோ இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவனம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | நாயை வெச்சி செஞ்ச பூனை... அலறிய நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ
மக்கள் கூட்டம் மிகுந்த இடத்திலேயே புகுந்து மூன்று பாம்புகளை ஒன்றன்பின் ஒன்றாக ராஜநாகம் விழுங்கியதை பார்த்து மக்கள் அச்சமடைந்தனர். அத்துடன் ராஜநாகம் பாம்புகளை கக்கியதையும் சுற்றுப்புற சூழ்ந்து நின்று அவர்கள் வேடிக்கையும் பார்த்தனர். therealtarzann என்ற Instagram பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவைப் பகிரும் போது, 'கிங் கோப்ரா முன்பு சாப்பிட்ட 3 பாம்புகளை எச்சில் போல வெளியே துப்புகிறது' என்ற தலைப்பு இடப்பட்டுள்ளது. ராஜநாகம் மூன்று பாம்புகளை கக்கும் இந்த வீடியோவை 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். வீடியோவைப் பார்த்த ஒரு நெட்டிசன் எழுதும்போது, பாம்பு ஏன் மூன்று பாம்புகளையும் துப்புகிறது? என கேள்வி கேட்டார்.
அவருக்கு யாரும் பதில் அளிக்காத நிலையில், இன்னொருவர் பாம்பு கூட இன்னொரு பாம்பை சாப்பிடுமா?, இன்று தான் வீடியோவில் பார்கிறேன், எனக்கே வியப்பாக இருக்கிறது என கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசன், பாம்புகளே கூட பாம்புகளை விரும்புவதில்லை என தெரிவித்துள்ளனர். இன்னொருவர், ஒரு பாம்பை பார்த்தாலே பயமாக இருக்கிறது, அங்குவேறு நான்கு பெரிய பாம்புகள் இருக்கின்றன, அதிலும் கொடிய ராஜநாகம் சீறிக் கொண்டிருக்கிறது, எப்படி தான் எல்லோரும் பயமில்லாமல் சுற்றியும் நின்று கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை என கூறியுள்ளார்.
மேலும் படிக்க | விஜய் பட பாடலை க்யூட்டாக பாடிய கேரள குழந்தை!! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ