விஜய் பட பாடலை க்யூட்டாக பாடிய கேரள குழந்தை!! வைரல் வீடியோ..

Little Girl Singing Sarakku Vechirukken Song Viral Video : சுட்டி குழந்தைகள், எது செய்தாலும் அழகுதான். ஒரு குழந்தை, தனது மழலை குரலில், விஜய் படத்தின் பாடல் ஒன்றை பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 4, 2024, 06:38 PM IST
  • விஜய் பட பாடலை பாடிய சிறுமி..
  • க்யூட்டான வைரல் வீடியோ...
  • எந்த பாடல் தெரியுமா?
விஜய் பட பாடலை க்யூட்டாக பாடிய கேரள குழந்தை!! வைரல் வீடியோ.. title=

Little Girl Singing Sarakku Vechirukken Song Viral Video : மழலை பேச்சும், சிரிப்பும் எப்போதும் அழகு. பாடினால், பேரழகு. அப்படி ஒரு குழந்தை விஜய் படத்தின் பாடலை பாடியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாடும் குழந்தைகள்:

குழந்தைகள் பொதுவாகவே, தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை அப்படியே உள்வாங்கி அதை செய்து காட்டுவர். இது, நற்பழக்கங்களுக்கும் பொருந்தும், தீய பழக்கங்களுக்கும் பொருந்தும். “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே..” என்ற பாடலே இருக்கிறது அல்லவா? குழந்தைகளுக்கு எதை கண்டாலும் ஆனந்தம்தான். காரணமே இல்லாமல் ஏதேனும் நடந்தால் கூட, அவை வியப்புடன் பார்க்கும், ஒன்றுமே இல்லாத விஷயங்களுக்கு கொக்கரக்கொட்டி சிரிக்கும். ஆனால், தும்மல்-இருமல் போன்ற சிறு சத்தங்கள் கூட அவைகளுக்கு அழுகை வரவழைத்து விடும். அப்படிப்பட மென்மையான குழந்தைகள், கொஞ்சம் நினைவு தெரிய ஆரம்பித்தவுடன் பாட ஆரம்பித்து விடுவர். பாடல் என்றால் “சரிகமபதனி..” என்ற ராகமான பாடல்கள் அல்ல. பிறர் பேசும் போது அவர்களின் வாயை பார்த்து அவை “ஆ..ஆ..” என்று பாடும் பாடல்தான். இப்படித்தான் அவை பேசவும் தொடங்குகின்றன. அப்படி ஒரு குழந்தை தற்போது விஜய் பட பாடலை பாடி வைரலாகி இருக்கிறது.

மேலும் படிக்க | புல்லெட்டில் மாஸ் எண்ட்ரி: இணையத்தை பற்றவைத்த மணமக்களின் வைரல் வீடியோ

வைரல் வீடியோ:

விஜய் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியான ஷாஜகான் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்தான் அது. மணி ஷர்மாவின் இசையில் உருவான அப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். இப்படத்தை எப்போது பார்த்தாலும் புதிது போல உணர வைப்பதற்கு இந்த பாடல்களும் ஒரு காரணம். இதில் இடம்பெற்றிருக்கும் “மெல்லினமே மெல்லினமே” பாடல் ஒன் சைட் லவ்வர்ஸ்களுக்கும், “சரக்கு வெச்சிருக்கே இறக்கி வெச்சிருக்கேன்..” பாடல் சிங்கிள்ஸ்களின் கொண்டாட்ட பாடலாகவும் இருக்கிறது. இந்த பாடலை பாடிய ஒரு குழந்தைதான் தற்போது வைரலாகி வருகிறது. 

இன்னும் சரியாக பேசக்கூட வராத இந்த வயதில், இக்குழந்தை “சரக்கு வெச்சிருக்கேன் இறக்கி வெச்சிருக்கேன்” பாடலை பாடுவதை பலர் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். ஹைலைட் என்னவென்றால், இந்த குழந்தை கேரளாவை சேர்ந்ததாம். இந்த மழலையின் வீடியோவை பார்த்த பலர் கமெண்டுகளில் ஹார்டீன்களை தெறிக்க விட்டு வருகின்றனர். பல மில்லியன் வியூஸ்களை கடந்திருக்கும் இந்த வீடியோ, தற்போது 12 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸை இன்ஸ்டாகிராம் தளத்தில் குவித்திருக்கிறது. 

மேலும் படிக்க | கண் முன்னே எமனைக் கண்ட பெண்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News