Viral Video: என்னடா இது வீரனுக்கு வந்த சோதனை... சிங்கத்தை பந்தாடும் எருமைகள்!
சிங்கம் காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. வேறு எந்த மிருகமும் தனது சக்திக்கு முன் நிற்க கூட இயலாது. ஆனால், சில சமயங்களில் சிங்கங்கள் கூட சில மிருகங்களிடம் மாட்டிக் கொள்வதைக் காணலாம்.
வனத்தில் வழ்க்கை என்பது உயிர் போராட்டங்கள் நிறைந்தது. காட்டின் ராஜா என அழைப்படும் சிங்கத்தின் வலிமையை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதன் வலுமையின் காரணமாகத் தான சிங்கம் காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. வேறு எந்த மிருகமும் தனது சக்திக்கு முன் நிற்க கூட இயலாது. ஆனால், சில சமயங்களில் சிங்கங்கள் கூட சில மிருகங்களிடம் மாட்டிக் கொள்வதைக் காணலாம். காட்டு விலங்குகள் தொடர்பான சமீபத்திய வீடியோவிலும் இதே போன்ற காட்சி காணப்படுகிறது. காடுகளில் இரை தேடி அலையும் சிங்கம், எருமை மாடுகளுக்கு நடுவே சிக்கித் திணறுவதை வீடியோவில் காணலாம். வீடியோவின் அந்த காட்சியை பார்க்க வந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
காடுகளில் உள்ள வலிமையான விலங்குகள் பலம் குறைந்தவர்களைத் தாக்கி இரையாவதை பல வீடியோக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் சில சமயங்களில் நாம் நினைத்ததற்கு மாறாக விஷயங்கள் நடக்கும் போது ஆச்சரியம் ஏற்படுவதை தடுக்க முடியாது. அந்த வகையான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. எருமைகள் சிங்கம் ஒன்றை பந்தாடுவதைப் பார்த்தால் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்படும்.
வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:
சிங்கம் மற்றும் எருமைகள் தொடர்பான இந்த காணொளியில், சிங்கம் இரை தேடி வந்ததையும், எருமை மாடுகளின் கூட்டம் அருகே சென்றதையும் காணலாம். சுலபமான இரையாகக் கருதி சிங்கம் தாக்கிய நிலையில், எருமைகள் கூட்டம் சேர்ந்து தாக்கியதில் ஒற்றுமையின் வலிமையினால் சிங்கம் திக்குமுகாடிப் போனது. சிங்கம் நுழைந்த உடனேயே, எருமை மாடுகள் பந்தாடத் தொடங்கின. ஒன்றன் பின் ஒன்றாக பந்தாடியதில், சிங்கம் கலங்கியது.
காணொளியின் முடிவில், சிங்கம் பலமுறை எருமை மாட்டை குறிவைத்து தாக்க முயற்சித்ததையும், எருமைகளின் ஒற்றுமையினால் அவற்றை இரையாக்க முடியாமல் போனதையும் காணலாம். சிங்கம் பயங்கரமாக தாக்கப்பட்டதையும் காணலாம். இந்த வீடியோ animals_powers என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ