தலைமுடி கொடுத்தால் பஞ்சுமிட்டாய்! வைரலாகும் கடைக்காரின் செயல்!
தலைமுடியை கொடுத்தால் அதற்கு பதிலாக கடைக்காரர் பஞ்சுமிட்டாய் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பழங்காலத்தில் பண்டமாற்று முறை என்கிற நடைமுறை இருந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒரு பொருளை வாங்க அதற்கு ஈடாக நம்மிடம் இருக்கும் மற்றொரு பொருளை கொடுக்க வேண்டும், இதுவே பண்டமாற்றும் முறையாகும். தெருவோர வியாபாரி ஒருவர் அதே முறையை கடைபிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதேபோல 80, 90களில் வாழ்ந்தவர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும், நெல்மணிகள், கேழ்வரகு, சோளம், கம்பு போன்ற பொருட்களை கொடுத்துவிட்டு உப்பு, ஐஸ், கடல் வகை உணவுகள் போன்ற அத்தியாவசியமான பொருட்களை வாங்கி கொள்வார்கள்.
இந்த பழக்கம் நாளடைவில் புழக்கத்தில் இல்லாமல் மறைந்து போன நிலையில், தற்போது தெரு வியாபாரியால் இந்த நடைமுறை மீண்டும் உயிர்பெற்று இருக்கிறது. இந்த வீடியோவை யூடியூபில் உணவுப் பதிவர் விஷால் என்பவர் பகிர்ந்துள்ளார். புடியா கே பால் என்று பிரபலமாக அறியப்படும் பஞ்சு மிட்டாயை பிரதாப் சிங் என்கிற தெருவோர வியாபாரி முடியை வாங்கிக்கொண்டு மிட்டாயை கொடுக்கிறார். அந்த வீடியோவில், கைநிறைய முடியுடன் நிறைய குழ்நதைகள் வரிசையாக முடிகிறது. அவர்கள் அருகே சைக்கிளில் பின்னல் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் இயந்திரத்தை வைத்துக்கொண்டு பிரதாப் சிங் பஞ்சு மிட்டாய் தயாரித்து கொண்டிருக்கிறார். அந்த குழந்தைகளிடம் அந்த வியாபாரி முடியை வாங்கிக்கொண்டு ரோஸ் நிறத்தில் இருக்கும் அந்த பஞ்சு மிட்டாய்களை அவர்களுக்கு வழங்குகிறார்.
யூடியூபில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 79,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வித்தியாசமான பண்டமாற்று முறையை கண்டு பறவையாளர்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர். இன்றளவும் ஒரு சில கிராமப்புறங்களில் உதிர்ந்த தலைமுடியை வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக சீப்புகள், ஹேர் கிளிப்புகள் போன்றவற்றை வியாபாரிகள் வழங்கி வருகின்றனர்.
மேலும் படிக்க | அனிருத்கே டப் கொடுக்கும் பூனை! இணையத்தை கலக்கிய வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR