சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது UFO சென்றுக் கொண்டிருந்ததை வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார் ஒரு பயணி. விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விபரீதமான சம்பவம் நடைபெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமானம் இறங்கத் தொடங்கி சரிவாக செல்வதற்கு முன்பான காட்சியை இந்த வீடியோ (Video) கிளிப் காட்டுகிறது, திடீரென்று, ஒரு வெள்ளை பொருள் விமானத்தின் விமானப் பாதைக்குக் கீழே நகர்கிறது.


ஒரு விமானம், வீடியோ கிளிப் கிட்டத்தட்ட ‘UFO’வுடன் மோதுவதுபோல் வருகிறது. இந்த வீடியோ தான் சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் வீடியோ.  



ஜனவரி 17 ஆம் தேதி விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், சூரிச் (Zurich Airport) விமான நிலையத்தில் தரையிறங்குவதைப் பதிவு செய்வதற்காக பயணிகள் தனது தொலைபேசி கேமராவை சுவிட்ச் செய்தபோது, அடையாளம் தெரியாத பறக்கும் பொருளைப் பதிவாகிவிட்டது.


இதைப் பார்த்த பயணிக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால், விமானத்தில் (Flight) இருந்த மற்ற பயணிகள் பீதியடையத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது, ஆனால் விமானி பாதுகாப்பு நெறிமுறையைப் பின்பற்றி அனைவரும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். 


Also Read | காற்றில் பறக்கும் Flying Snakes: காரணத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்


நிபுணர்களின் கூற்றுப்படி, ரேடார் மீது கண்ணுக்குத் தெரியாததால் பொருள் நிச்சயமாக ட்ரோன் அல்லது பறவை அல்ல. சில நாட்களுக்கு முன்பு, ஹவாய் தீவான (Hawaiian island) Oahu-வில் வசிப்பவர்களும் கடலில் காணாமல் போவதற்கு முன்பு ஒரு பிரகாசமான நீல நிறப் பொருள், இரவு வானத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. இது தலைப்பு செய்திகளில் இடம் பெற்றது.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR