மாப்பிள்ளையிடன் மச்சினிச்சி செய்த குறும்பு: கடுப்பான மாப்பிள்ளை, வைரலாகும் வீடியோ
Funny Viral Video: மாப்பிள்ளையிடம் மச்சினிச்சி செய்த குறும்பின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இது இணையவாசிகளை கவர்ந்துள்ளது.
சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான லட்சக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. இதில் பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண்கிறோம். சில சமயங்களில் திருமண மேடையிலேயே மணமகனும், மணமகளும் செய்யும் சில வேலைகளால் சிரிப்பை அடக்க கூட முடியாமல் போகிறது. பல நேரங்களில் யாரும் எதிர்பார்க்காத பல விஷயங்களும் மணமேடையிலேயே நடந்துவிடுகின்றன. திருமணத்துக்கு வந்துள்ள விருந்தினர்களை அதிச்சிக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் நடக்கின்றன. இவை இணையத்தில் பகிரப்பட்ட பின்னர் இணையவாசிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
திருமணங்கள் தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் பகிரப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், சிரிப்பை வரவழைக்கும் விதத்திலும் இருக்கின்றன. சமீபத்திலும் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ மணமகன் மற்றும் மணமகளின் தங்கை, அதாவது மணமகனின் மச்சினிச்சிக்கு இடையில் நடக்கும் வேடிக்கையான நிகழ்வு பற்றியது. இதில் மாப்பிள்ளையிடம் மணமகளின் தங்கை செய்யும் வீடியோ மிகவும் கியூட்டாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.
மாப்பிள்ளையை வம்பிக்கிழுத்த மச்சினிச்சி:
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமண விழா இனிமையாக நடந்துகொண்டிருப்பதை காண முடிகின்றது. மணமகனின் ஊர்வலம் திருமண மண்டபத்தை அடைகிறது. சிறிது நேரம் கழித்து மணமகள் தனது சகோதரிகளுடன் அங்கு வருகிறார். மணமகனும் மேடையில் இருந்து இறங்கி அவர் கையைப் பிடிக்க வருகிறார். ஆனால் இங்கு மணமகளின் தங்கை மாப்பிள்ளையின் கையை தள்ளி விட்டு வேடிக்கை காட்டுகிறார்.
மேலும் படிக்க | வகுப்பறையில் இப்படியா செய்றது? என்னமா இது...வீடியோ வைரல்
மச்சினிசிச்யின் குறும்பு வீடியோவை இங்கே காணலாம்:
வீடியோவின் முடிவில், மணமகன் மிகவும் ஏமாற்றத்துடன் இருப்பதைக் காண முடிகின்றது. மணமக்களின் இந்த வேடிக்கையான வீடியோ royal_kathiyawadi_couple என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டிகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
‘பாவம் அந்த மாப்பிள்ளை’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘மாப்பிள்ளை நன்றாக மாட்டிவிட்டார்’ என ஒருவர் எழுதியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ