சென்னை: தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசியர் என பல அவதாரங்களை எடுத்து அதை சிறப்பாக செய்து புகழ்பெற்றவர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்கிற 8 வயது மகள் உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


ALSO READ | சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு– இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு


இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு குகன் தாஸ் என பெயரிட்டு உள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவாக தெரிவித்துள்ளார். தனது மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மகனின் நெற்றியில் முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


 



 


அவரின் அப்பாவின் பெயர் தாஸ். அப்பாவே மகனாக வந்திருப்பதால் மகனுக்கு தாஸ் என்று பெயர் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் குகன் தாஸை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.


ALSO READ | Watch: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நடிகர் அஜித்தின் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR